நாட்டின் பண­வீக்கம் குறையும்: அரவிந்த் பன­கா­ரியாநாட்டின் பண­வீக்கம் குறையும்: அரவிந்த் பன­கா­ரியா ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு ...
இந்திய ஐ.டி., துறை ஒபாமா உருவாக்கிய பிரச்­னை­க­ளுக்கு டிரம்ப் மூலம் தீர்வு காண திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2016
01:31

புது­டில்லி:இந்­திய ஐ.டி., துறை, அமெ­ரிக்க அதிபர் ஒபா­மாவின் நட­வ­டிக்­கையால் சந்­தித்­துள்ள பிரச்­னை­க­ளுக்கு, அந்­நாட்டின் புதிய அதி­ப­ராக பொறுப்­பேற்கும் டொனால்டு டிரம்ப் மூலம் தீர்வு காண, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.
அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் வெளி­நாட்டு வல்­லு­னர்­களை தற்­கா­லி­க­மாக பணி­ய­மர்த்த, எச் 1பி, எல் 1, எல்.பி., ஆகிய விசாக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்­கான கட்­ட­ணங்­களை, ஒபாமா அரசு, இரு மடங்கு உயர்த்­தி­யுள்­ளது. அத்­துடன், ஓராண்­டுக்கு வழங்கும் 65 ஆயிரம் எச் 1பி விசாக்­களின் எண்­ணிக்­கையை, 15 ஆயி­ர­மாக குறைக்­கவும், அமெ­ரிக்கா திட்­ட­மிட்­டுள்­ளது. இதனால், அமெ­ரிக்­கா­விற்கு அதிக அளவில் சாப்ட்வேர் சேவை­களை அளித்து வரும் இந்­தி­யாவைச் சேர்ந்த, டி.சி.எஸ்., இன்­போசிஸ், விப்ரோ உள்­ளிட்ட ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், இந்­திய ஐ.டி., துறைக்கு மேலும் அச்­ச­மூட்டும் வகையில், டொனால்டு டிரம்பின் தேர்தல் பிர­சாரம் இருந்­தது. ‘நான் அமெ­ரிக்க அதி­ப­ரானால், இந்­தி­யாவும், சீனாவும் பறித்துக் கொண்ட நம் வேலை வாய்ப்­பு­களை திரும்பப் பெற்றுத் தருவேன்; எச் 1பி விசாவை அடி­யோடு ஒழிப்பேன்’ என, அவர் கூறி­யி­ருந்தார்.மேலும், குடி­யேற்ற கட்­டுப்­பாடு, அமெ­ரிக்கா, இந்­தி­யா­வுக்கு வழங்கும் பி.பி.ஓ., பணி­களை குறைப்­பது உள்­ளிட்ட, அவ­ரது கருத்­துக்கள், இந்­திய ஐ.டி., துறைக்கு எதி­ரா­கவே இருந்­தன. இந்­நி­லையில், அமெ­ரிக்க அதிபர் தேர்­தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்­றுள்­ளதால், தேர்தல் பிர­சா­ரத்தின் போது கூறி­ய­வற்றை செயல்­ப­டுத்­தினால், கடு­மை­யாக பாதிப்பு ஏற்­படும் என, இந்­திய ஐ.டி., துறை­யினர் கவலை தெரி­வித்­துள்­ளனர்.
இது குறித்து, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில்­துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், நேற்று செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:அமெ­ரிக்கா, விசா கட்­ட­ணத்தை இரு மடங்கு உயர்த்­தி­யுள்­ளது குறித்து, உலக வர்த்­தக அமைப்­பிடம், இந்­தியா, ஏற்­க­னவே புகார் அளித்­துள்­ளது.அத்­துடன், விசா பிரச்னை தொடர்­பாக அமெ­ரிக்க அர­சுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வரு­கி­றது. இது தொடர்­பாக, எவ்­வ­ளவு விரை­வாக முடி­யுமோ, அவ்­வ­ளவு விரை­வாக, புதிய அதி­ப­ராக பொறுப்­பேற்கும் டொனால்டு டிரம்ப்பின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று தீர்வு காண, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
அவர், இந்­திய ஐ.டி., துறையின் கவ­லை­களை கவ­ன­முடன் கேட்டு, ஆவன செய்வார் என்ற நம்­பிக்கை உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.
கூடுதல் சுமை
இந்­திய ஐ.டி., துறையின் 60 சத­வீத வருவாய், அமெ­ரிக்­காவில் இருந்து தான் வரு­கி­றது. புதிய விசா கட்­டண உயர்வால், ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு ஆண்­டுக்கு கூடு­த­லாக, 26 ஆயிரம் கோடி ரூபாய் செல­வாகும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)