லாரி வாடகை 50 சத­வீதம் வீழ்ச்சி; கரன்சி நட­வ­டிக்­கையால் ஓட்­டு­னர்­க­ளிடம் பணப்­பு­ழக்கம் தாராளம்லாரி வாடகை 50 சத­வீதம் வீழ்ச்சி; கரன்சி நட­வ­டிக்­கையால் ஓட்­டு­னர்­க­ளிடம் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.55 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.55 ...
உணவு பொருட்கள் விலை வீழ்ச்­சியால் மொத்த விலை பண­வீக்கம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
23:47


புது­டில்லி : மொத்த விலை அடிப்­ப­டை­யி­லான, நாட்டின் பண­வீக்கம், நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, கடந்த அக்­டோ­பரில், 3.39 சத­வீ­த­மாக வீழ்ச்சி கண்­டுள்­ளது; இது, செப்­டம்­பரில், 3.57 சத­வீ­த­மாக இருந்­தது.
இந்­தாண்டு, ஜூன் மாதம், மொத்த விலை பண­வீக்கம், 3.90 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருந்­தது. தொடர்ந்து இரண்­டா­வது மாத­மாக, அக்­டோ­பரில், மொத்த விலை பண­வீக்கம் குறைந்­து உள்­ளது.மொத்த விலை பண­வீக்க குறி­யீட்டில், தயா­ரிப்பு மற்றும் எரி­சக்தி துறை பொருட்­களின் பங்­க­ளிப்பு, 80 சத­வீ­த­மாக உள்­ளது.இத்­துறை சார்ந்த பொருட்­களின் விலை, அக்­டோ­பரில், ஓர­ள­விற்கு உயர்ந்­துள்­ளது. இருந்த போதிலும், உணவுப் பொருட்கள், பழங்கள் ஆகி­ய­வற்றின் விலை வீழ்ச்­சியால், மொத்த விலை பண­வீக்கம் குறைந்­துள்­ளது.
மொத்த விலை குறி­யீட்டில், எரி­பொருள் மற்றும் மின்­சா­ரத்தின் பங்­க­ளிப்பு, மதிப்­பீட்டு மாதத்தில், 14.91 சத­வீ­த­மாக உள்­ளது. பெட்ரோல், டீசல் ஆகி­ய­வற்றின் விலை உயர்வால், எரி­பொருள் துறையின் பண­வீக்கம், 6.18 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது; இது, செப்­டம்­பரில், 5.58 சத­வீ­த­மாக இருந்­தது. அது போல, இதே காலத்தில், தயா­ரிப்புத் துறையின் பண­வீக்கம், 2.48 சத­வீ­தத்தில் இருந்து, 2.67 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. மொத்த விலை பண­வீக்­கத்தில், தயா­ரிப்புத் துறையின் பங்­க­ளிப்பு, 65 சத­வீ­த­மாக உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
மதிப்­பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்கள் பண­வீக்கம், 10.48 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது; இது, செப்­டம்­பரில், 11.21 சத­வீ­த­மாக இருந்­தது. அதே சமயம், பருப்பு வகைகள், உரு­ளைக்­கி­ழங்கு ஆகி­ய­வற்றின் பண­வீக்கம் உயர்ந்­தி­ருந்­தது; இது, செப்­டம்­பரில் குறைந்து காணப்­பட்­டது. மத்­திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்­டுகள் செல்­லாது என, அறி­வித்­ததை அடுத்து, அனைத்து துறை­களின் செயல்­பா­டுகள் சுணக்கம் கண்­டுள்­ளன.
உணவு தானி­யங்கள் உட்­பட, பல்­வேறு சரக்கு போக்­கு­வ­ரத்து குறைந்­துள்­ளது. சில்­லரை விற்­பனை பெரிதும் சரிந்து விட்­ட­தாக, வணி­கர்கள் கவலை தெரி­வித்து உள்­ளனர். இதனால், காய்­க­றிகள், பழங்கள் உள்­ளிட்ட, அழுகும் பொருட்கள் தேக்கம் கண்டு, அவற்றின் விலை சரி­வ­டைந்து உள்­ளது. தற்­போது பரு­வ­மழை துவங்­கி­யுள்­ளதால், வரும் மாதங்­களில், உணவு தானி­யங்கள் உற்­பத்­தியும், அவற்றின் சந்தை வரத்தும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இவற்றின் அடிப்­ப­டையில், இம்­மாதம் மொத்­த­விலை பண­வீக்கம் மேலும் சரி­வ­டையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ரிசர்வ் வங்கி, சில்­லரை விலை பண­வீக்க அடிப்­ப­டையில், வங்­கி­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)