பதிவு செய்த நாள்
18 நவ2016
00:49
புதுடில்லி : வீடியோடெக்ஸ் நிறுவனம், உஷா ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து, எல்.இ.டி., டிவி உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில் உள்ள நொய்டாவில், வீடியோடெக்ஸ் இன்டர்நேஷனலுக்கு தொழிற்சாலை உள்ளது. அந்நிறுவனம், அங்கு, ‘டிவி’ உற்பத்தி செய்கிறது. தற்போது, வீடியோடெக்ஸ், உஷா ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து, உள்நாட்டில், எல்.இ.டி., டிவிக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம், உஷா நிறுவனம், மல்டி மீடியா துறையில் களமிறங்க உள்ளது.
இது குறித்து, வீடியோடெக்ஸ் நிறுவனர் வினய் பஜாஜ் கூறியதாவது:எங்கள் நிறுவனம், உஷா நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம், இரு நிறுவனங்களும் இணைந்து, எல்.இ.டி., டிவி தோற்றம், தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும். வாடிக்கையாளர்கள் தரும் பணத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், சிறப்பான டிவிக்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|