ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனதுரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 68 ஆனது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு ...
ஏ.டி.எம்.,களை தேட உதவும் 'கூகுள்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
10:40

பணம் எடுக்க மக்கள் அல்லாடி வரும் நிலையில், ஏ.டி.எம்., மையங்களை கண்டறிய, 'கூகுள்' நிறுவனம் உதவுகிறது.
மத்திய அரசின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால், தற்காலிகமாக பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர். மையங்கள் செயல்பட தொடங்கிய, ஒரு மணி நேரத்திலேயே, இருப்பு பணம் காலியாகி, முடங்கி விடுகின்றன.
மக்கள் அவதியை கருத்தில் கொண்டு, இணையதளம் வாயிலாக உதவ, கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. கூகுள் தேடு தளத்தின் முகப்பு பக்கத்தில், இதற்காக, ''Find an ATM near you'' என்ற பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. அதை பயன்படுத்தி உள்ளே நுழைந்தால், நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின், ஏ.டி.எம்., மையங்களை, வரைபடம் வாயிலாக அறியலாம்.
பொதுமக்கள் தங்களிடம் இருக்கும், ஸ்மார்ட் போன் வாயிலாகவும், இவ்வசதியை பயன்படுத்த லாம். இதே போல, 'www.cashnocash.com' போன்ற சில தனியார் நிறுவனங்களும், நம் இருப்பிட பின் கோடு எண்ணை பதிவு செய்தால், சுற்றியுள்ள, ஏ.டி.எம்., மையங்களின் விபரம், செயல்படும் நிலையில் உள்ளதா, மக்கள் காத்திருக்கின்றனரா என்ற விபரங்களையும் அளித்து வருவது, மக்களுக்கு பயனளிப்பதாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)