பதிவு செய்த நாள்
18 நவ2016
23:26

புதுடில்லி : ஜீப் நிறுவனம், இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், சிறிய வகை, எஸ்.யு.வி., வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ஜீப் நிறுவனம், எஸ்.யு.வி., வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், சிறிய வகை, எஸ்.யு.வி., வாகனத்தை விற்பனை செய்ய உள்ளது. இது, போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட், ரெனோவின் டஸ்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என, தெரிகிறது. ஜீப் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து, இன்ஜின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, ஜீப் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளை போல், இந்தியாவிலும், அதிகளவில் சந்தை வாய்ப்புகள் உள்ளன. எனவே, எங்கள் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், எஸ்.யு.வி., வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|