பதிவு செய்த நாள்
20 நவ2016
00:13

ஆமதாபாத்:அமுல் நிறுவனம், மேற்கு வங்கம் மாநிலத்தில், பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த, பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் உள்ள, சங்க்ரெயில் என்ற உணவு பூங்காவில், தன், ஏழாவது பால் பதப்படுத்தும் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அமுல் டெய்ரி நிர்வாக இயக்குனர் ரத்னம் கூறியதாவது:பால் பதப்படுத்தும் ஆலை அமைப்பதற்காக, எங்கள் நிறுவனத்திற்கு, மேற்கு வங்க மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம், 17 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. ஆலையின் கட்டுமானப் பணி, 2017ல் துவங்கி, 2018 இறுதி யில் முடிவடையும்.இதற்காக, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. கடந்த, 2015 – 16ல், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 4,825 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 5,700 கோடி ரூபாயாக அதிகரிக்கும். கோல்கட்டாவில், பால் விற்பனைசந்தையில், அமுல் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|