பதிவு செய்த நாள்
20 நவ2016
00:23

புதுடில்லி:மத்திய அரசின் அறிவிப்பால், சரக்கு வாகனங்களுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:மத்திய அரசு, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்ததால், சரக்கு வாகன சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகளில், சுங்க வரி வசூல், தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது, வரவேற்கத்தக்கது.இருப்பினும், அரசின் அறிவிப்பால், சரக்கு வாகனங்களுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்கு வாகன தொழில் மூலம், நேரடி மற்றும் மறைமுகமாக, 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர்.இவர்கள், கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மத்திய அரசின் கரன்சி நடவடிக்கையால், வாகனங்களில், காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கான மொத்த செலவில், பெட்ரோல், டீசல், வாகனங்களில் பழுது என, 80 சதவீதம், ரொக்கம் மூலமே நடக்கிறது.தற்போது, வங்கிகளில் பணம் எடுக்கவும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சரக்கு வாகனங்களுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|