பதிவு செய்த நாள்
22 நவ2016
05:36
புதுடில்லி : டி.டி.கே., பிரஸ்டிஜ், 1,700 கோடி ரூபாய் விற்றுமுதலை ஈட்ட முடிவு செய்துள்ளது.
டி.டி.கே., பிரஸ்டிஜ், குக்கர், இண்டக் ஷன் ஸ்டவ் உள்ளிட்ட, வீட்டு சமையலறை சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், 1,700 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தினேஷ் கார்க் கூறியதாவது: எங்கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், 1,510 கோடி ரூபாய் விற்றுமுதலை ஈட்டியது. தற்போது, மழை நன்கு உள்ளதால், சந்தையில் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், புதிய பொருட்களை அதிகளவில் அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம், நடப்பு நிதியாண்டில், விற்றுமுதல், 15 சதவீதம் அதிகரித்து, 1,700 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்., மாதம், வீட்டை சுத்தப்படுத்தும் சாதன சந்தையில் களமிறங்கியது எங்கள் நிறுவனம். தற்போது, 540 பிரத்யேக கடைகளில், எங்கள் தயாரிப்பு விற்கப்படுகிறது. ஆண்டுதோறும், கூடுதலாக, 40 – 50 கடைகளில் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|