பதிவு செய்த நாள்
22 நவ2016
05:37
சென்னை : ஹார்ட்கேஸில் ரெஸ்ட்டாரன்ட்ஸ், இந்தியாவில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில், ஹார்ட்கேஸில் ரெஸ்ட்டாரன்ட்ஸ், ‘மெக்டோனல்ஸ்’ என்ற பெயரில், உடனடி உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் விரிவாக்கத்திற்காக, 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்மிதா ஜாட்டியா கூறியதாவது: மெக்டோனல்ஸ் உணவகங்களில், ‘மெக்கபே’ கடைகளும் நடத்தி வருகிறோம். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், சோதனை ரீதியாக துவக்கப்பட்ட மெக்கபே, சமீபத்தில், சென்னையில் துவங்கப்பட்டது; இதற்கு, வாடிக்கையாளரிடம் வரவேற்பு காணப்படுகிறது. மூன்று ஆண்டுகளில், 12 நகரங்களில், 95 உணவகங்கள் துவங்கப்பட்டு உள்ளன. அடுத்த, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. உடனடி உணவக தொழில் துறையின் வளர்ச்சி, 11 சதவீதம் என்றளவில் உள்ளது. அதே சமயம், நடப்பு நிதியாண்டில், செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி, 15 சதவீதம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|