பதிவு செய்த நாள்
22 நவ2016
05:38

புதுடில்லி : இந்திய தொழிலகக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 2030ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7,000 கோடி டாலர் பங்களிப்பை வழங்கும் திறன், சுரங்கத் துறைக்கு உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், வறுமையில் உள்ள மக்களை, வளமான வாழ்க்கைக்கு உயர்த்துவதிலும், இத்துறை முக்கிய பங்களிப்பை வழங்கும். இத்துறை, 60 – 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.மத்திய அரசின் நடவடிக்கையால், சுரங்கத் துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பல அம்சங்கள், களையப்பட்டு உள்ளன. கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் மிக முக்கியமானது. இச்சட்டம், சுரங்க ஒதுக்கீட்டு நடைமுறைகளில், ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளுக்கு உறுதி செய்கிறது. எனினும், சுரங்க உரிம நடைமுறைகளில் ஏற்படும் கால தாமதத்தை குறைத்து, எளிமையான, விரைவான செயல்பாடுகளை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், சுரங்கத் துறை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|