பதிவு செய்த நாள்
22 நவ2016
05:38

புதுடில்லி : ஜெர்மன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஹென்கல் நிறுவனம், இந்தியாவில், 320 கோடி டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
எப்.எம்.சி.ஜி., துறையைச் சேர்ந்த, ஹென்கல், விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 320 கோடி டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், ஆண்டுதோறும், 7 – 8 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காண திட்டமிட்டு உள்ளது. மேலும், உலகளவில் நன்றாக செயல்படும் எங்கள் பிராண்டுகள் மற்றும் உள்நாட்டில் சிறப்பாக இருக்கும் பிராண்டுகள் ஆகியவற்றின் விற்பனையை, அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் மொத்த வருவாயில், 75 சதவீதத்தை, ‘டாப் – 10’ பிராண்டுகளின் விற்பனை மூலமாக எட்ட முயற்சி எடுக்கிறோம். இயல்பான வளர்ச்சி மூலமாக மட்டுமின்றி, கையகப்படுத்துதல் மற்றும் இணைப்புகள் மூலமாக, விரைவான வளர்ச்சியை எட்டவும் திட்டமிடுகிறோம்.
இந்தியாவில், முதற்கட்டமாக, மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், தொழிற்சாலை அமைக்க, 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். ஏற்கனவே, எங்கள் நிறுவனத்திற்கு, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்க நாடுகளுக்கான ஒருங்கிணைந்த ஆய்வு சோதனைக் கூடம், புனேவில் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|