பதிவு செய்த நாள்
22 நவ2016
05:42

புதுடில்லி : ‘‘பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியா, வியாபாரத்திற்கு உகந்த இடம் என, அன்னிய முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்,’’ என, உலகப் புகழ் பெற்ற, பொருளாதார நிபுணர் கை சோர்மன் தெரிவித்து உள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, கை சோர்மன், ‘பொருளாதாரம் பொய் பேசாது: சிக்கலான நேரத்தில் தாராள சந்தையின் தற்காப்பு’ என்பது உட்பட, புகழ் பெற்ற ஆய்வு நுால்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
உகந்த நாடுஅவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டு கால மோடியின் ஆட்சி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கும், அன்னிய முதலீட்டாளர்களுக்கும், சரியான சமிக்ஞையை அனுப்பியுள்ளது. இதன் காரணமாக, இந்தியா, தற்போது வர்த்தகம் புரிவதற்கு மிகவும் உகந்த நாடாக கருதப்படுகிறது; இது, மோடிக்கு கிடைத்த வெற்றி. பொதுத் துறையில் உள்ள அதிகாரவர்க்கமும், கட்டுப்பாடுகளும் தான், ஒரு நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு, மிகப்பெரிய தடைக்கற்களாக உள்ளன.
இந்த இரு அம்சங்களையும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுயநல அரசியலை மீறி, அழித்தொழிப்பது என்பது, மிகக் கடினமான பணியாகும். அதனால், மந்த கதியில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு துறை திட்டங்களுக்கு, மோடியை குறை கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை.
தகுந்த பலன்எனினும், அவரின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், ஏற்றுமதிக்கு உதவாமல், மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இத்திட்டத்தின் அனைத்து சாதகமான அம்சங்களையும், இந்திய அரசும், வணிக நிறுவனங்களும், சர்வதேச அளவில் பிரபலப்படுத்த வேண்டும்; அது, இந்தியாவை, வெறும் சுற்றுலா தலம் என்றளவில், முன்னிறுத்துவதாக இருக்கக் கூடாது. ற்கனவே, இத்திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம், திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க, ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது; அதற்கு, தகுந்த பலன் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
விறுவிறு உயர்வுமத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க, தாராளமயமாக்கல் உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக, கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 29 சதவீதம் உயர்ந்து, 4,000 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய, 2014 – 15ம் நிதியாண்டில், 3,094 கோடி ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|