பதிவு செய்த நாள்
22 நவ2016
10:25

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 தினங்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260.79 புள்ளிகள் உயர்ந்து 26,025.93-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 83.30 புள்ளிகள் சரிந்து 8,012.40-ஆகவும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாகவும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே காலை 10.15 மணியளவில் பங்குச்சந்தைகள் சற்று சரிந்த போதும், சென்செக்ஸ் 110.33 புள்ளிகள் உயர்ந்து 25,875.47-ஆகவும், நிப்டி 37.45 புள்ளிகள் உயர்ந்து 7,966.55-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|