பதிவு செய்த நாள்
22 நவ2016
15:58

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 நாட்கள் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று(நவ., 22-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 261 புள்ளிகளும், நிப்டி 83 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்ததாலும் இன்றைய வர்த்தகம் தொடர்ந்து உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 195.64 புள்ளிகள் உயர்ந்து 25,960.78-ஆகவும், நிப்டி 73.20 புள்ளிகள் உயர்ந்து 8,002.30-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1475 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1083 நிறுவன பங்குகள் சரிந்தும் 189 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|