பதிவு செய்த நாள்
23 நவ2016
05:43

சென்னை : இந்தியா சிமென்ட்சின் ஏற்றுமதி வருவாய், இரு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
சிமென்ட் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியா சிமென்ட்ஸ், நடப்பு நிதியாண்டில், செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.52 லட்சம் டன் சிமென்ட் மற்றும் கிளிங்கர் சிமென்ட் விற்பனை செய்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1.02 லட்சம் டன்னாக குறைந்திருந்தது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர், என்.ஸ்ரீனிவாசன் கூறியதாவது: மத்திய அரசின் கரன்சி நடவடிக்கைக்கு பின், எங்கள் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை; வழக்கம் போலவே இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிக்கும் போது, இடர்பாடுகள் இல்லாமல் போய்விடும். எங்கள் நிறுவனம், கடந்த ஆண்டு, ஏற்றுமதி மூலம், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. நடப்பு நிதியாண்டில், செப்., மாதம் முடிந்த காலாண்டில், ஏற்றுமதி வருவாய், 70 கோடி ரூபாயாக உள்ளது. எனவே, முழு நிதியாண்டில், அந்த வருவாய், 170 – 200 கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலாண்டில், நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 62 சதவீதம் உயர்ந்து, 38.50 கோடி ரூபாயில் இருந்து, 62.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|