பதிவு செய்த நாள்
26 நவ2016
07:37
பெங்களூரு : பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், முழுமையான உணவு தயாரிப்பு நிறுவனமாக திகழ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரி மற்றும் பால் பொருட்கள் விற்பனையில், பிரிட்டானியா முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், தற்போது, புதிய உணவு பொருட்களை அறிமுகம் செய்து, முழு உணவு தயாரிப்பு நிறுவனமாக திகழ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறியதாவது: எங்கள் நிறுவனம், கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், 7,947.90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. எங்கள் தயாரிப்புகளை, புதிய சந்தைகளான வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் விற்பனை செய்ய முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. முக்கிய பிராண்டுகளான, ‘மேரி கோல்ட், குட் டே’ உள்ளிட்ட பிஸ்கட்கள், அனைத்து தரப்பினரும், வாங்கும் வகையில், சிறிய பாக்கெட்களில், குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மேலும் புதிதாக, பல உணவு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம், முழுமையான உணவு தயாரிப்பு நிறுவனமாக, பிரிட்டானியா திகழும். விற்றுமுதலும், இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|