பதிவு செய்த நாள்
26 நவ2016
07:40

புதுடில்லி : ‘செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், குடியிருப்புகள் விலை குறையும்’ என, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, வலைதள நிறுவனமான, ‘பிராப்ஈக்விடி’ தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்:மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த, 2008க்கு பின், விற்பனை செய்யப்பட்ட குடியிருப்புகள், விற்பனையாத வீடுகள், கட்டுமான பணியில் உள்ள இல்லங்கள் ஆகியவற்றின் மதிப்பு, 30 சதவீதம் குறையும். இந்த வகையில், அடுத்த, 6 – 12 மாதங்களில், சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட, 42 நகரங்களில், 49,42,637 குடியிருப்புகளின் சந்தை மதிப்பு, 39,55,044 கோடி ரூபாயில் இருந்து, 8,02,874 கோடி ரூபாய் குறைந்து, 31,52,170 கோடி ரூபாயாக வீழ்ச்சி அடையும். இதில், மும்பையில் உள்ள குடியிருப்புகள், மிக அதிகமாக, 2,00,330 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பிழக்கும்.
இந்த வகையில், பெங்களூரு, 99,983 கோடி ரூபாய், கூர்கான், 79,059 கோடி ரூபாய் என்ற அளவிற்கு, குடியிருப்புகள் மதிப்பு குறையும். மத்திய அரசின் நடவடிக்கையால், அமைப்பு சாராத ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணம் வெகுவாக குறையும். ஐந்து பேரில் ஒருவர் தான், முழுத் தொகையையும் காசோலையில் தர முன்வருவார். அதனால், பழைய வீடுகள் விற்பனை சரிவடையும். வரும் வாரங்களில், பழைய வீடுகள் விற்பனை அடியோடு முடங்கும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 15 நாட்களில், ரியல் எஸ்டேட் துறையில், கணக்கில் வராத ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது; வரலாறு காணாத பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|