பதிவு செய்த நாள்
26 நவ2016
07:41

புதுடில்லி : மத்திய வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, 2022ல், விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, பால் பண்ணை விவசாயத்தை ஊக்குவிக்க முடிவு செய்து உள்ளது. இதற்காக, வலைதளத்தில், கால்நடைகள் சந்தை, துவக்கப்பட உள்ளது. ‘மின்னணு பசு சந்தை’ என்ற இந்த வலைதளத்தில், கால்நடைகளை வாங்கலாம், விற்கலாம். அதுபோல, கால்நடைகளின் உறைய வைக்கப்பட்ட விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் விற்பனையிலும் ஈடுபடலாம். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஒரு விவசாயி, குஜராத்தில், மிக அதிகமாக பால் கறக்கும், ‘கிர்’ பசுக்களை சுலபமாக வாங்கலாம். அதுபோல, எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வாங்கி, பால் பண்ணை வியாபாரத்தில் ஈடுபடலாம். www.epashuhaat.gov.in என்ற இந்த வலைதளத்தில், கால்நடைகள் குறித்த விபரங்களை, படத்துடன் காண, வசதி செய்யப்பட்டுள்ளது. கால்நடை தீவன தகவல்களுடன், விற்பனையாகும் கால்நடைகளை, வாங்குவோரிடம் சேர்ப்பதற்கான போக்குவரத்து வசதியும், வலைதளத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|