பதிவு செய்த நாள்
26 நவ2016
12:54

புதுடில்லி : ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்தனர். இதேபோன்று புதிய நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம்.,களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நாட்டில் பண தட்டுப்பாடு படிப்படியாக சரியாகி வருகிறது. நிலையை முழுவதுமாக சரியாகாத நிலையில் இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அன்றாட செலவுகளுக்கு பணம் எடுக்க மக்கள் ஏடிஎம்.,க்களை தேடி அலைந்து கொண்டுள்ளனர். அப்படி அலைந்து திரிந்த பிறகும் சில ஏடிஎம்.,களில் பணம் இல்லை என்ற அறிவிப்பு காணப்படுகிறது. இதனால் மக்களின் சிரமங்களை குறைக்க, அண்மையில் உள்ள எந்தெந்த ஏடிஎம்.,களில் பணம் உள்ளது என்பதை இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொண்டு, பின்னர் ஏடிஎம்.,க்கு புறப்பட்டு செல்வதற்காக 5 புதிய மொபைல் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* வால்நட் (Walnut money manager) - அருகில் உள்ள ஏடிஎம்., எது, அதில் இப்போது பணம் உள்ளதா என்பதை அறிய உதவுகிறது. இந்த ஆப்ஸ் பயன்படுத்தி பண பரிமாற்றம், கட்டணம் செலுத்துவது ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
* கேஸ் நோ கேஸ் ( cash no cash) - இந்த ஆப்ஸ்.,ல் உங்களின் பின் கோர்ட் (pin code) எண்ணை பதிவு செய்தால், அருகில் இருக்கும் ஏடிஎம்.,கள், அவற்றில் இப்போது பணம் உள்ளதா, இல்லையா என்பது பற்றிய தகவல்கள் பெற முடியும். அதே போன்று புதிய ரூபாய் நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் தொடர்பான செய்திகளும் அளிக்கப்படுகிறது.
* கேஸ் பைண்டர் (cash finder) - அருகில் பணம் இருக்கும் ஏடிஎம், அதற்கு செல்வதற்கான வரைபடம் ஆகியவற்றை கொண்டது. அந்த ஏடிஎம்.,ல் இருக்கும் வரிசை விபரம் குறித்த தகவல்களும் அளிக்கப்படுகிறது.
* ஏடிஎம் ஹன்ட் (atm hunt) - இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்ஸ் ஆகும். அருகில் உள்ள ஏடிஎம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம் விபரங்களையும் இந்த ஆப்ஸ் வழங்குகிறது. அங்கு இருக்கும் கூட்டம், வரிசை விபரமும் அளிக்கப்படுகிறது.
* மை கேஸ் (my cash) - இந்த ஆப்ஸ்.,ல் பின் கோர்டு அல்லது இடத்தை பதிவு செய்தால், அருகில் இருக்கும் ஏடிஎம்., விபரங்களை தரும். ஆன்டிராய்டு போன் இல்லாதவர்களும் இந்த ஆப்ஸ் பயன்படுத்தும் வகையில், ஆப்ஸ் போன்ற செயலாற்றும் இணையதளத்தையும் இந்த ஆப்ஸ் உருவாக்கியவர்கள் துவக்கி உள்ளனர்.
இந்த ஆப்ஸ்.,களை இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் டவுன்லோட் செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பலருக்கும் இந்த ஆப்ஸ்.,கள் பலவகைகளிலும் பயன்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|