பதிவு செய்த நாள்
26 நவ2016
14:49

பெர்லின் : 2030 அம ஆண்டிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனையை தடை செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிற்கு ஆதரவாக அனைத்து மாகாண பிரதிநிதிகளும் ஓட்டளித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் சேர்க்கப்படும் பொருட்களின் வரி அதிகரித்துள்ளது தான் ஜெர்மனி அரசின் இந்த முடிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2030ம் ஆண்ட முதல் புகையில்லா வாகனங்களை தயாரிக்கவும் ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் வாகன விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் ஜெர்மனி கேட்க உள்ளது.
ஏற்கனவே எலக்ட்ரானிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால், அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது. தற்போது உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் பலரும் இதனை ஆதரித்து வருவதால், அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஜெர்மனி துவக்கி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|