பதிவு செய்த நாள்
27 நவ2016
00:49

புதுடில்லி:மாருதி நிறுவனம், லிமிடெட் எடிசனில், ‘வேகன் ஆர்’ காரை அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டில், கார்கள் உற்பத்தி, விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா, முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின், வேகன் ஆர் மாடல் கார், அதிகளவில் விற்பனையாகி வருகிறது. தற்போது, வேகன் ஆர் காரில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது, மாருதி நிறுவனம். இந்த காரின் விலை, டில்லியில், 4.40 லட்சம் ரூபாய் மற்றும் 5.37 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. இது குறித்து, மாருதி நிறுவன அதிகாரி. ஆர்.எஸ்.கால்சி கூறியதாவது:தற்போது, மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதில், ‘ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் டிஸ்பிளே, ரியர் ஸ்பாய்லர்,’ குரல்வழி ஆலோசனை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கார், அனைத்து வாடிக்கையாளரையும் ஈர்க்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|