பதிவு செய்த நாள்
27 நவ2016
00:50

புதுடில்லி:பானாசோனிக் நிறுவனம், ஒரு லட்சம் ஏர்பியூரிபையர் சாதனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. பானாசோனிக் நிறுவனம், ‘மொபைல் போன், டிவி, ஏர் பியூரிபையர்’ உள்ளிட்ட மின் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏர் பியூரிபையர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் ஏர் பியூரிபையர் பிரிவின் பொது மேலாளர், சையத் மூனிஸ் அலி கூறியதாவது:இந்தியாவில், ஏர் பியூரிபையர் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தற்போது, ஏழு மாடலில், ஏர் பியூரிபையர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பானாசோனிக், கடந்த ஆண்டில், 5,000 ஏர் பியூரிபையர் விற்பனை செய்த நிலையில், நடப்பாண்டில்,20 ஆயிரம் சாதனங்களை விற்க திட்டமிட்டு உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 150 கோடி ரூபாய் மதிப்புக்கு, ஒரு லட்சம் ஏர் பியூரிபையர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, மொத்த விற்பனையில், இணையதளம் வாயிலான விற்பனை பங்கு, 30 சதவீதம் என்றளவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|