பதிவு செய்த நாள்
27 நவ2016
00:52

வதோதரா:மன்பசந்த் பிவரேஜஸ், நான்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்தியாவில், மன்பசந்த் பிவரேஜஸ், பழச்சாறுவணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்துக்கு, குஜராத் மாநிலம், வதோதராவில் இரண்டு; உ.பி., மாநிலம் – வராணாசி, ஹரியானா – அம்பாலா; உத்தரகண்ட் – டேராடூன் ஆகிய இடங்களில், தலா, ஒரு தொழிற்சாலை உள்ளன. இவை, தினசரி, 1.70 லட்சம் பெட்டி பழச்சாறு தயாரிக்கும் திறன் உடையவை.
இந்நிலையில், மன்பசந்த், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்காக, நான்கு புதிய தொழிற்சாலைகள் துவக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரேந்திர சிங் கூறியதாவது:இந்தியாவில், பழச்சாறுக்கு, தேவை நன்கு உள்ளது. அதனால், கடந்த ஓராண்டில் மட்டும், இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. அடுத்து தென் மாநிலங்களை உள்ளடக்கிய, நான்கு இடங்களில், புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இவை, அடுத்த, 18 மாதங்களில் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|