பதிவு செய்த நாள்
27 நவ2016
00:53

புதுடில்லி:வேர்ல்பூல் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது. வேர்ல்பூல் நிறுவனத்திற்கு, இந்தியாவில், ஹரியானா மாநிலம், பரிதாபாத்; மஹாராஷ்டிரா – புனே; புதுச்சேரி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறு வனம், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.உள்நாட்டில், 90 சதவீத தேவையை, இந்த மூன்று ஆலைகள் மூலம் பூர்த்தி செய்கிறது.
இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், நிகர விற்பனையாக, 3,488 கோடி ரூபாயை ஈட்டியது. இந்நிலையில், தற்போது, விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ஏசி, சமையல் அறை சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க உள்ளது.
இது குறித்து, வேர்ல்பூல்இந்தியா நிர்வாக இயக்குனர் சுனில் டிசோஸா கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் ஆலையின் திறனை உயர்த்த, 140 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, வேர்ல்பூல் தயாரிப்புகள், தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில், விற்றுமுதலை, இரு மடங்கு அதிகரிக்க உள்ளோம். இதற்காக, ஏசி, சமையல் சாதனங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த விற்பனையில், அவற்றின் பங்கு, 20 சதவீதம்என்றளவில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|