பதிவு செய்த நாள்
27 நவ2016
00:54

புதுடில்லி:‘‘கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ஒரு நபர் நிறுவனங்கள் பிரிவில், 4,000 நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்டு உள்ளன; இது, முந்தைய நிதியாண்டை விட, 75 சதவீதம் அதிகம்,’’ என, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர், அர்ஜூன் ராம் மெக்வால், லோக்சபாவில் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், 84,481 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 149 நிறுவனங்களும் அடங்கும். முந்தைய நிதியாண்டில், 157 வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியா வில் பதிவு செய்யப்பட்டன.கடந்த, 2011 – 16 வரையிலான நிதியாண்டுகளில், 918 அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்தாண்டு மார்ச் இறுதி வரை, இந்தியாவில், 4,357 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது, 2011 மார்ச் நிலவரப்படி,3,439 ஆக இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக, காணாமல் போன நிறுவனங்கள் பிரிவில், வெளிநாட்டு நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.ஒரு நிறுவனம், குறிப்பிட்ட முகவரியில் இல்லையென்றாலோ, அதன் இயக்குனர்கள் காணவில்லை என்றாலோ, அது, காணாமல் போன நிறுவனங்கள் பிரிவில் சேர்க்கப்படும்.
தொடர்ந்து இரு ஆண்டுகளாக, வருவாய் விபரங்களை, கம்பெனிகள் பதிவாளர் மற்றும் பங்குச்சந்தைகளுக்கு தெரிவிக்க தவறும் நிறுவனங்களும், இப்பட்டியலில் இடம் பெறும். இத்தகைய முறைகேடுகளை தடுக்க, நிறுவனத்தின் இயக்குனருக்கு, அவரது அடையாளம் மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில், ‘டின்’ எனப்படும், தனி அடையாள எண் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|