பதிவு செய்த நாள்
27 நவ2016
00:55

புதுடில்லி:தொழில் கொள்கை மற்றும் மேம்பாடு துறையும், ஜவுளி அமைச்சகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில், குறிப்பாக, ஆயத்த ஆடைகள் பிரிவில், கடந்த இரு ஆண்டுகளில், 5.30 லட்சம் பேருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகைய பயிற்சி பெற்ற, 81 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களில், 79 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின், ‘இந்தியாவில்தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், 25 துறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.அதில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையும் அடங்கும். இத்துறையை மேம்படுத்த, சிறப்பு ஊக்கச்சலுகை திட்டமும், நடைமுறையில் உள்ளது. இந்தியாவில், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில், ஜவுளித் துறை, இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில், இத்துறையில், 5.10 கோடி பேர் நேரடியாக வும், 6.80 கோடி பேர் மறைமுகமாக வும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|