பதிவு செய்த நாள்
27 நவ2016
00:56

புதுடில்லி:இந்திய பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் அறிக்கை:உருக்கு அமைச்சகம்,பல்வேறு ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பொருட்களுக்கு, இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்று மற்றும் உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான கெடு, டிசம்பருடன்முடிவடைகிறது. தற்போது, தரச் சான்று கோரி வந்துள்ள, 30க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலித்து வருகிறது.
அதில், இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த, ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே, தரச் சான்று உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.விண்ணப்பித்த பல உருக்கு ஆலைகளில், இம்மாதம் தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இன்னும் பிற நடைமுறைகளை முடிக்க, 2 – 3 மாதங்கள் ஆகும். அதன்பின் அளிக்கப்படும், ‘ஆர்டர்’ படி, வெளிநாடுகளில் இருந்து, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் வந்து சேர, ஆறு மாதங்கள் ஆகும். இதை கருத்தில் கொண்டு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களின் தரச் சான்று திட்டத்தை, ஒன்பது மாதங்கள் ஒத்தி வைக்க, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|