பதிவு செய்த நாள்
27 நவ2016
01:00

புதுடில்லி:‘‘மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்; இருந்த போதிலும், நாட்டின் பொருளாதாரம், விரைவில், புதிய முறையிலான இயல்பு நிலைக்கு திரும்பும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அவர், மேலும் கூறியதாவது:மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, மொத்த பணப்புழக்கத்தில், 86 சதவீதத்தை திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது.
இதே அளவிற்கு புதிய கரன்சியை, உடனடியாக, புழக்கத்தில் விடுவது என்பது முடியாத காரியம். எனினும், அதற்கான தீவிர முயற்சியை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டு உள்ளன. இருந்த போதிலும், கரன்சி தட்டுப்பாடு, மந்தமான உற்பத்தி, தேவைப்பாடு குறைந்துள்ளது போன்ற பிரச்னைகள், நிறுவனங்களின் வளர்ச்சியில்தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடப்பு, அக்., – டிச.,வரையிலான மூன்றாவது காலாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும். அதே சமயம், இது தற்காலிக பாதிப்பு தான்; நீண்ட நாட்களுக்கு தொடராது; மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். அது, முன்பிருந்தது போலஅல்லாமல், புதிதாக இருக்கும். அதாவது, பணப் பரிமாற்றங்களில், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்; அதிகளவில் காசோலைகள், ‘கிரெடிட், டெபிட் கார்டு’கள், ‘இ – வாலெட்’ எனப்படும், மின்னணு பணப் பைகள் வாயிலான, பணப்பரிவர்த்தனைகள் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 8ம் தேதி, அறிவித்தது. அத்துடன், செல்லாத கரன்சியை மாற்றவும், புதிய கரன்சியை பெறவும், பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன. பணத் தட்டுப்பாடு காரணமாக, மூலப் பொருட்களை வாங்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் முடியாமல், வர்த்தகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் திணறி வருகின்றன.
இந்த பணத் தட்டுப்பாடு பிரச்னையை, 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பான, மத்திய அரசின் நடவடிக்கை, சமீப காலத்திற்கு, பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும்; நாட்டின் வளர்ச்சி பலவீனமாகும். அதே சமயம், இந்நடவடிக்கையால், நீண்ட கால அடிப்படையில் நன்மை விளையும்; அரசின் வரி வருவாய் அதிகரிக்கும். நாட்டு மக்களிடையே, வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் பெருகும்.மூடிஸ் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|