ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி  எப்படி செயல்படுகிறது? ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி எப்படி செயல்படுகிறது? ... காப்பீடு பிரீமியம் வருவாய் 30 சதவீதம் உயர்வு காப்பீடு பிரீமியம் வருவாய் 30 சதவீதம் உயர்வு ...
இணையம் இல்­லாமல் பண பரி­வர்த்­தனை வசதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
05:05

நெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள் என, டிஜிட்டல் பரி­வர்த்­தனை மேற்­கொள்ள பல வழிகள் இருந்­தாலும், இவற்றை பயன்­ப­டுத்த இணைய வசதி இருக்க வேண்டும். ஆனால், கையில் ஸ்மார்ட் போன் இல்­லாத அல்­லது இணைய வசதி இல்­லாத போது என்ன செய்­வது? இது போன்ற நேரங்­களில், யு.எஸ்.எஸ்.டி., தொழில்­நுட்பம் மூலம் இணைய வசதி இல்­லா­ம­லேயே, பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­ளலாம். இதன் அடிப்­ப­டையில், நேஷனல் யூனி­பைடு, யு.எஸ்.எஸ்.டி., பிளாட்பார்ம் இயங்­கு­கி­றது. அனை­வ­ருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் நோக்­கத்தின் ஒரு பகு­தி­யாக, இந்த வசதி அமை­கி­றது. இது பற்றி ஓர் அறி­முகம்:
யு.எஸ்.எஸ்.டி., என்றால் என்ன?அன்ஸ்­டக்­சர்டு சப்­ளி­மென்ட்ரி சர்வீஸ் டேட்டா என்­பதே, யு.எஸ்.எஸ்.டி., என, குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. மொபைல் போனில், குரல் சேவைகள் மேற்­கொள்ள உதவும், ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் பரி­வர்த்­த­னைக்கு உதவும் தொழில்­நுட்­ப­மாக இது விளங்­கு­கி­றது. வங்கிச் சேவை உள்ளிட்ட பரி­வர்த்­த­னை­க­ளுக்கு இதை பயன்­ப­டுத்­தலாம். இந்த சேவையில், வங்கி மற்றும் தொலை தொடர்பு நிறு­வனம் இணைந்து, பரி­வர்த்­த­னைக்கு உத­வு­கின்­றன. குறுஞ்­செய்தி வசதி உள்ள எந்த போனிலும், இது செயல்­படும்.
எப்­படி பயன்­ப­டுத்­து­வது?இந்த வச­தியை வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரி பார்க்க, மினி ஸ்டேட்மென்ட் பெற, எம்.எம்.ஐ.டி., (மொபைல் வங்கிச் சேவை குறி­யீடு), ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு அல்­லது ஆதார் எண் மூலம் பணப் பரி­வர்த்­தனை செய்ய பயன்­ப­டுத்­தலாம். ஒரு முறை பாஸ்­வேர்டு பெற, எம்-பின் எண் பெற மற்றும் வங்கிக் கணக்­குடன், ஆதார் இணைப்பு நிலை அறிய உள்­ளிட்ட வச­தி­க­ளுக்கும் இதை பயன்­ப­டுத்­தலாம்.

என்ன தேவை?இந்த வச­தியை, சாதா­ரண மொபைல் போனிலும் பெற முடியும். ஆனால், மொபைல் வங்கிச் சேவைக்­காக பதிவு செய்து கொண்­டி­ருந்தால் மட்­டுமே, இதை பயன்­ப­டுத்த முடியும். ஆனால், பணம் பெறு­ப­வ­ருக்கு இது கட்­டா­ய­மில்லை. ஆங்­கிலம், தமிழ் உள்­ளிட்ட, 12 மொழி­களில் பயன்­ப­டுத்­தலாம். ஆங்­கிலம் எனில், *99# என, டைப் செய்து அணுக வேண்டும். தமிழ் எனில், *99* #23 என, டைப் செய்ய வேண்டும். அதன்பின், பட்­டி­யலில் இருந்து தேவை­யான சேவையை தேர்வு கொள்­ளலாம்.
கட்­டணம் உண்டுஇந்த சேவைக்­காக, சிறிய கட்­டணம் வசூ­லிக்­கப்­படும். பரி­வர்த்­தனை நிக­ழ­வில்லை என்­றாலும், கட்­டணம் உண்டு. ஆனால், ரோமிங் போன்ற கட்­டணம் கிடை­யாது. இந்த கட்­டணம், தற்­போது பரி­வர்த்­த­னைக்கு, 0.50 பைசா­வாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இது மொபைல் பில்லில் சேர்ந்­து­விடும். இந்த சேவை மூலம் அதி­க­பட்­ச­மாக, 5,000 ரூபாய் பரி­வர்த்­தனை மேற்­கொள்­ளலாம். இந்த பரி­வர்த்­த­னையை துவக்­கிய பின், ரத்து செய்ய முடி­யாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)