பதிவு செய்த நாள்
29 நவ2016
05:14

கோல்கட்டா:யெல்லோ டை ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், இந்தியாவில், 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.உணவு மற்றும் பானங்களுக்கான, வணிக உரிமைகள் பிரிவில் செயல்பட்டு வருகிறது, யெல்லோ டை ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம். இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, கரன் தானா கூறியதாவது:யெல்லோ டை நிறுவனம், விரிவாக்கத்துக்காக இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. உணவு மற்றும் பானங்களுக்கான, உரிமைகள் மேலாண்மை நிறுவனம் என்பது புதிதான ஒன்று.
இப்பிரிவில், முதன்முதலில், நாங்கள் அமெரிக்காவின், ஜென்யூன் பிராஸ்டர் சிக்கன் (ஜி.பி.சி.,) மூலமாக இறங்கினோம். இந்த ஆண்டின் இறுதிக்குள், எங்கள், ஜி.பி.சி., கடைகளின் எண்ணிக்கை, 70 ஆக உயரும். வெளிநாட்டு பிராண்டுகளில் மட்டுமின்றி, உள்நாட்டு பிராண்டுகளிலும், நாங்கள் கவனம் செலுத்த துவங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|