பதிவு செய்த நாள்
29 நவ2016
05:17

லக்னோ:மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியதாவது:இந்தியாவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், எட்டு கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், வேலை இழப்பிற்கு ஆளாக நேரிடும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு நடக்காது என, அரசு உறுதி அளிக்கிறது.
இது தொடர்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பணத் தட்டுப்பாடு பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும்.கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்துள்ள இந்த மிகப்பெரிய நடவடிக்கையால், துவக்கத்தில் ஏற்பட்ட சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த திட்டத்தால், குறு, சிறு, நடுத்தர நிறுவங்களுக்கு எந்த பாதிப்பும் நேராது; வரும் மாதங்களில், அதன் பயன்கள் தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|