பதிவு செய்த நாள்
29 நவ2016
05:17

புதுடில்லி:‘சீனா, வியட்நாம் போல, இந்தியாவும், மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகள், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு, மத்திய நிதியமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.
அதன் விபரம்:மத்திய அரசின் வரிச் சலுகைகளால், 2015 – 16ம் நிதியாண்டில், மொபைல் போன் தயாரிப்புத் துறை, முந்தைய நிதியாண்டை விட, மதிப்பு மற்றும் அளவில், முறையே, 185 சதவீதம் மற்றும் 90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், மொபைல் போன் தயாரிப்பு, 18,900 கோடி ரூபாயில் இருந்து, 54 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 94 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
எனினும், மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் லாபத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு, வருமான வரி விலக்கு அளித்தால், இத்துறையில், இந்தியா, சர்வதேச மையமாக உருவெடுக்கும். தற்போது, இத்துறைக்கு, வருமான வரிச் சலுகை ஏதும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், வியட்நாம், மொபைல் போன் தயாரிப்புக்கு, 10 சதவீதம் குறைவாக வரி விதித்து, 30 ஆண்டுகளுக்கு, வருமான வரி விலக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வியட்நாம் மொபைல் போன் தயாரிப்புத் துறையை விட, சீனாவின் மொபைல் போன் தயாரிப்புத் துறை, 32 – 35 மடங்கு பெரியது.மொபைல் போன் துறையில், சீனாவை விஞ்சி இந்தியா வளர்ச்சி காண, மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறைக்கு, வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|