பதிவு செய்த நாள்
29 நவ2016
11:42

உருளைக் கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், உருளைக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது; ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, உற்பத்தி இல்லை. இதனால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, உருளைக் கிழங்கு விற்பனைக்கு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளை, குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைத்து, விற்பனைக்கு அனுப்பி வந்தனர். இதனால், உருளைக் கிழங்கு விலை குறையவில்லை. சில்லரை விலையில், கிலோ, 20 - 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, உருளைக் கிழங்கு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இருப்பு வைக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை, காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், வரத்து அதிகரித்து, விலை சரியத் துவங்கி உள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், உருளைக் கிழங்கு, சில்லரை விலை யில், கிலோ, 10 - 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. .
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|