ஈரோட்டில் 2,000 விசைத்­தறி தொழிற்­சா­லைகள் மூடல்ஈரோட்டில் 2,000 விசைத்­தறி தொழிற்­சா­லைகள் மூடல் ... தொழில்­மு­னைவு ஆய்வு கல்­வியில்  177 பேருக்கு பிஎச்.டி., பட்டம் தொழில்­மு­னைவு ஆய்வு கல்­வியில் 177 பேருக்கு பிஎச்.டி., பட்டம் ...
மார்ச் வரை இல­வசம்: ஜியோவின் புத்­தாண்டு பரிசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
00:08

மும்பை: தொலை தொடர்பு நிறு­வ­ன­மான, ரிலையன்ஸ் ஜியோ, தற்­போது வழங்கி வரும் அதன் இல­வச சேவைகள் அனைத்­தையும், 2017 மார்ச், 31 வரை நீட்­டிக்க இருப்­ப­தாக, அதன் தலைவர், முகேஷ் அம்­பானி அறி­வித்­துள்ளார். மும்­பையில் நடை­பெற்ற, செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில், இதை அவர் தெரி­வித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ, தன்­னு­டைய சேவையை, கடந்த செப்., 1ல், அறி­முகம் செய்­தது. மேலும், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, டிச., 31 வரை, அனைத்து வகை­யான வாய்ஸ் கால்கள், இன்­டர்நெட் சேவைகள் அனைத்தும் இல­வசம் எனவும் அறி­வித்­தது.
இதை­ய­டுத்து, 83 நாட்­களில், 5 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை அந்­நி­று­வனம் பெற்று சாதனை படைத்­தது. பல முன்­னணி நிறு­வ­னங்கள், 10 ஆண்­டு­களில் எட்­டாத உய­ரத்தை, 83 நாட்­க­ளி­லேயே, ஜியோ எட்­டி­யது. இதன் தொடர்ச்­சி­யாக, 2017 மார்ச்சில், 10 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை எட்டப் போவ­தாக அறி­வித்­தது.
இந்­நி­லையில், டிச., 4 முதல், ஒவ்­வொரு புதிய வாடிக்­கை­யா­ளரும், புத்­தாண்டு சலு­கை­யாக, மார்ச், 31 வரை, சேவை­களை இல­வ­ச­மாக பெறலாம் என, அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், ஏற்­க­னவே இருக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும், இந்த சலுகை பொருந்தும் எனவும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.இது பற்றி, அம்­பானி கூறு­கையில், ‘‘ஜியோ, முதல் மூன்று மாதங்­களில், ‘பேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ் ஆப்’ ஆகி­ய ­வற்றை விட, வேக­மான வளர்ச்­சியை பெற்­றுள்­ளது. மூன்று மாதங்­களில், 5.2 கோடிக்கும் அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்­களை ஜியோ பெற்­றுள்­ளது. வேக­மாக வளரும் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மாக, ஜியோ மாறி­யுள்­ளது. இருப்­பினும், ஏற்­க­னவே இருக்கும் மற்ற நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து, தேவை­யான ஆத­ரவை நாங்கள் பெற­வில்லை. கடந்த மூன்று மாதங்­களில், கிட்­டத்­தட்ட, 900 கோடி வாய்ஸ் கால்கள், மூன்று நிறு­வ­னங்­களால் தடுக்­கப்­பட்­டன,’’ என, தெரி­வித்­துள்ளார்.
சிறப்பு சலு­கைகள்● டிச., 4 முதல், புதிய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, மார்ச் வரை சலுகை● ஜியோவின் புத்­தாண்டு சலு­கை­யாக, ஒவ்­வொரு நாளும், 1 ஜிபி டேட்டா இல­வசம்● அனைத்து உள்­நாட்டு வாய்ஸ் கால்­களும் இல­வசம்● ஜன., 1 முதல், ஏற்­க­னவே இருக்கும் அனைத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும், இந்த சலு­கைகள் வழங்­கப்­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)