டால்­மியா பாரத் குழுமம்ரூ.2,000 கோடி முத­லீடு டால்­மியா பாரத் குழுமம்ரூ.2,000 கோடி முத­லீடு ... நிறு­வ­னங்­களின் பண வரம்பைஉயர்த்த ‘அசோசெம்’ கோரிக்கை நிறு­வ­னங்­களின் பண வரம்பைஉயர்த்த ‘அசோசெம்’ கோரிக்கை ...
நார்வே நிறுவனங்களின் சர்வே :ஊழலும், ‘சிவப்பு நாடா’ முறையும் இந்தியாவில் தொழில் துவங்க தடையாக உள்ளன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2016
04:30

புதுடில்லி:‘இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்கு, ‘சிவப்பு நாடா’ முறையும், ஊழலும், தடைக்­கற்­க­ளாக உள்­ளன’ என, இங்­குள்ள நார்வே நிறு­வ­னங்கள் கருத்து தெரி­வித்து உள்­ளன.இந்­தி­யாவில், குறிப்­பாக, கடல்சார் துறையின் தொழில் வாய்ப்­புகள், எதிர்­கால வர்த்­தக சூழல் ஆகி­யவை குறித்து, நார்வே நிறு­வ­னங்­க­ளிடம் கருத்துக் கணிப்பு நடத்­தப்­பட்­டது.
தாமதம்:தேசிய நார்வே வர்த்­தகக் கூட்­ட­மைப்பு, மும்­பையின், நார்வே துணை துாத­ரகம், டில்­லியின், நார்வே துாத­ரகம் ஆகி­யவை இணைந்து, முதன்­மு­த­லாக இந்த கருத்துக் கணிப்பை நடத்­தி­உள்­ளன. இதில், இந்­தி­யாவில் உள்ள நார்­வேயைச் சேர்ந்த, 101 நிறு­வ­னங்­களில், 83 நிறு­வ­னங்கள் பங்­கேற்­றன.
இந்த ஆய்வு குறித்து, நார்வே நாட்டின் இந்­திய துாதர், நில்ஸ் ரக்னர் கம்ஸ்வக் கூறி­ய­தா­வது:நார்வே நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் முத­லீடு செய்ய ஆர்­வ­மாக உள்­ளன. ஆனால், ஏகப்­பட்ட விதி­மு­றைகள் கார­ண­மாக, கோப்­புகள் நகர்­வதில் தாமதம் உண்­டா­கி­றது. இத்­த­கைய சிவப்பு நாடா முறையும், ஊழலும், முத­லீட்­டிற்கு மிகப்­பெ­ரிய தடை­யாக உள்­ள­தாக, நார்வே நிறு­வ­னங்கள் கரு­து­கின்­றன.
இருந்த போதிலும், மத்­திய அரசு, சுல­ப­மாக தொழில் துவங்க வச­தி­யாக, பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை தளர்த்­தி­யுள்­ளதால், தற்­போ­தைய வர்த்­தக சூழல், முத­லீட்­டிற்கு சாத­க­மாக உள்­ள­தாக, ஆய்வில் பங்­கேற்ற, 62 சத­வீத நிறு­வ­னங்கள் ஒப்­புதல் தெரி­வித்து உள்­ளன. அடுத்த மூன்று ஆண்­டு­களில், முத­லீட்டுச் சூழல், மேலும் சாத­க­மாக இருக்கும் என, 75 சத­வீத நிறு­வ­னங்கள் கூறி­யுள்­ளன.
தொழி­லா­ளர்­களின் ஊதிய விகிதம் உயர்ந்து வரு­வது குறித்தும், நார்வே நிறு­வ­னங்கள் யோசிக்­கின்­றன. தங்கள் தொழில் சார்ந்த சந்தை விரி­வ­டைய, 70 சத­வீத நிறு­வ­னங்கள் விரும்­பு­கின்­றன. ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்­டுக்கு ஏற்ற இட­மாக, இந்­தியா உள்­ளது என, 68 சத­வீ­தத்­தினர் தெரி­வித்து உள்­ளனர்.

வாய்ப்புகள்
வலை­த­ளங்­களில் புது­மை­யாக தொழில் செய்யும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களை துவக்க, இந்­தியா உகந்த நாடு என, 55 சத­வீதம் பேர் கருத்து கூறி­யுள்­ளனர். சர்­வ­தேச பொரு­ளா­தார சூழலை ஒப்­பிடும் போது, இந்­தியா மட்­டுமே பிர­கா­ச­மான வளர்ச்சி காணும் நாடாக உள்­ளது. இத்­துடன், உள்­நாட்டு நீர்­வழி போக்­கு­வ­ரத்து, கட­லோர படகு போக்­கு­வ­ரத்து, கப்பல் வடி­வ­மைப்பு மற்றும் கட்­டுதல் உள்­ளிட்ட கடல்சார் துறை­க­ளிலும், வள­மான வர்த்­தக வாய்ப்­புகள் உள்­ள­தாக, பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள் தெரி­வித்து உள்­ளன.துறை­மு­கங்­களை நவீ­ன­ம­ய­மாக்­கு­வது, நீர்­வழி போக்­கு­வ­ரத்தை மேம்­ப­டுத்­து­வது, திரவ எரி­வா­யுவில் சரக்கு கப்பல் போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­வது போன்­ற­வற்றின் மூலம், கடல்சார் துறை சிறப்­பான வளர்ச்சி காணும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)