இந்­திய அரிசி இறக்­கு­ம­திக்கு சீனா அனு­மதிஇந்­திய அரிசி இறக்­கு­ம­திக்கு சீனா அனு­மதி ... ருச்சி சோயா இண்­டஸ்ட்ரீஸ் விவ­சா­யி­க­ளுக்கு கடன் உதவி ருச்சி சோயா இண்­டஸ்ட்ரீஸ் விவ­சா­யி­க­ளுக்கு கடன் உதவி ...
ஒட்­டக பாலையும் விட­வில்லை அமுல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
05:11

ஆ­ம­தாபாத்,:அமுல் நிறு­வனம் அடுத்த மூன்று மாதங்­களில், ஒட்­டகப் பால்விற்­ப­னையை துவக்க உள்ளது. குஜராத் மாநில பால் கூட்­டு­றவுஅமைப்பு, ‘அமுல்’ என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. அடுத்­த­கட்­ட­மாக இந்­நி­று­வனம், இன்னும் மூன்று மாதங்­களில், ஒட்­டகப் பால் விற்­ப­னையை துவக்க முடிவு செய்­து உள்ளது. இது­கு­றித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஹர்தீப் பங்கா கூறி­ய­தாவது:எங்கள் நிறு­வனம், மத்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணைய சான்­றி­த­ழுடன், ஒட்­டகப் பாலை விற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது.முதல் கட்­ட­மாக, அரை லிட்டர் பாட்­டிலில், ஒட்­டகப் பால், குஜராத் மாநிலம், ஆ­ம­தாபாத் நகரில் உள்ள, 500 அமுல் பால­கங்­களில் விற்­கப்­படும். பால் விற்­பனை மூன்று மாதங்­களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இதற்­கான ஆலை கட்ச் நகரில் அமைந்­துள்­ளது.இந்த பால் தர­மா­ன­தாக இருக்­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்தி, விற்­ப­னைக்கு தயா­ரா­வ­தற்கு நாங்கள் இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டோம்.
இந்த இரண்டு ஆண்டு கால முயற்சியில், எங்களுடைய ஒட்­ட­கப்பால் தரத்துடன் இருப்­ப­தோடு, மக்கள் விரும்பி வாங்­கவும் முன்­வ­ரு­வர்; நல்ல வர­வேற்பு அவர்­க­ளிடம் இருக்கும் என்­ப­தையும் அறிந்து கொண்டோம்.இதற்­கி­டையே பல தன்­னார்வ அமைப்­பு­களும் ஒட்­டகப் பாலின் பயன்கள் குறித்த தக­வல்­களை, பல்­வேறு வகை­களில் மக்­க­ளிடம் கொண்டு சென்­றுள்­ளனர். இது எங்­களுக்கு மிகவும் உத­வி­யாக இருக்கும்.இவ்­வாறு அவர் கூறினார். இது ­கு­றித்து, உணவு பாது­காப்பு ஆணைய தலைவர் பவன் அகர்வால் கூறு­கையில், ‘‘ஒட்­டகப் பால் விற்­ப­னைக்கு, தர நிர்­ணய சான்று வழங்கும் பணி துவக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம்,முக்­கிய நக­ரங்­களில், தர­மான ஒட்­டகப் பால் விற்­பனை செய்­வது உறுதி செய்­யப்­படும்,’’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)