‘இக்ரா’ நிறு­வனம் கணிப்பு:நிலக்­கரி விலை உயர்வால்உள்­நாட்டு உருக்கு துறை பாதிப்பு‘இக்ரா’ நிறு­வனம் கணிப்பு:நிலக்­கரி விலை உயர்வால்உள்­நாட்டு உருக்கு துறை ... ... யு.பி.ஐ., செய­லியை பயன்­ப­டுத்­து­வது எப்­படி? யு.பி.ஐ., செய­லியை பயன்­ப­டுத்­து­வது எப்­படி? ...
சைபர் பணத்தை புரிந்து கொள்ள...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2016
01:18

பணத்தின் வடிவம் மாறிக் கொண்டே வரும் நிலையில், இணைய தொழில்­நுட்பம் சாத்­தி­ய­மாக்கி இருக்கும், சைபர் பணம் எனும் புதிய வடிவம் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என்றும், பணத்தை புதிய நோக்கில் புரிந்து கொள்­வதை அவ­சி­ய­மாக்­கு­கி­றது என்றும், ‘சைபர் கேஷ்’ புத்­த­கத்தில், ராபர்ட் கட்மன் விவ­ரிக்­கிறார்.
பதி­னைந்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன், அறி­மு­க­மா­னதில் இருந்து பணம், அதன் வடிவம், செயல்­பாட்டில் மாறிக் கொண்டே இருக்­கி­றது. இந்த மாற்­றங்கள் பொரு­ளா­தார செயல்­பாட்­டிலும் பிர­தி­ப­லித்து வரு­கி­றது. பொரு­ளா­தார செயல்­பா­டு­களில், பணம் முக்­கிய பங்கு வகிப்­பதால், பணம் சார்ந்த செயல்­பா­டு­களில் ஏற்­படும் மாற்றம் பரி­வர்த்­தனை, உற்­பத்தி மற்றும் கட­னிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.
இன்று, நாம் காகித பண வடிவில் இருந்து மின்­னணு பணத்­திற்கு மாறிக் கொண்­டி­ருக்கும் போது, இதே நிலை இருக்­கி­றது. ரூபாய் நோட்­டுகள் மற்றும் காசோ­லைக்கு மாற்­றாக பிளாஸ்டிக் கார்­டுகள், மின்­னணு பணப் பரி­மாற்றம், தானி­யங்கி பண கிளீ­யரிங் போன்­றவை கார­ண­மாக, உலகம் பணத்தின் தானி­யங்­கி­ம­ய­மாக்­கலில் அடுத்த கட்­டத்­திற்கு தயா­ராகி கொண்­டி­ருக்­கி­றது.
இணையம் மூல­மான மின்­வ­ணிகம், பல­வகை­யான இணையம் மூலம் பணம் செலுத்தும் செயல்­மு­றை­க­ளுக்கு வித்­திட உள்­ளது. இந்த சைபர் பணம், ஒரு சந்­தை­யாக, இணை­யத்தின் பயன்­பாட்டை பல மடங்கு அதி­க­ரிக்க உள்­ளது. உற்­பத்தி மற்றும் நிதி பரி­வர்த்­த­னை­யிலும், இணை­யத்தின் பயன்­பாட்டை அதி­க­ரிக்க உள்­ளது. டிஜிட்டல் பண வடி­வங்­களால், நாம் புதிய தொழில்­பு­ரட்சி யுகத்தில் நுழைந்­தி­ருக்­கிறோம்.
இதை புரிந்து கொள்ள, முதலில் நாம், மின்னணு பணம் எனும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும். கம்ப்­யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்­நுட்­பங்­களின் பயன்பாடு, ஏற்­க­னவே வங்­கிகள் பணம், பணப் பரி­வர்த்­த­னையை கையாளும் விதத்தை மாற்றியுள்­ளது.
பணம் சார்ந்த செயல்­பா­டு­களை, தானி­யங்­கிம­ய­மாக்­கு­வ­தற்­கான களம் தயா­ராகி உள்ள நிலையில், இப்­போது, மின்­னணு பண வடி­வத்தின் உச்­ச­மாக சைபர் பணத்தை கையாள, இணை­யத்தின் எழுச்­சியை வங்­கிகள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. சைபர் பணம் மற்ற பண வடி­வங்­களில் இருந்து மாறு­பட்­டி­ருக்­கி­றது.
பணத்தில் ஏற்­பட்­டுள்ள பெரும் தாக்­கத்தை உண்­டாக்கக் கூடிய மாற்­றத்தை புரிந்து கொள்ள, பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் அமைப்பின் மைய­மாக விளங்கும் சமூக அமைப்­பாக, பணத்தை புரிந்து கொள்­வதே சரி­யாக இருக்கும்.
பணம் தொடர்­பான புரி­தலை தெளி­வு­ப­டுத்­து­வதில், பொரு­ளா­தார வல்­லு­னர்கள் ஓர­ள­வுக்கே உத­வு­கின்­றனர். அவர்­களில் பெரும்­பா­லானோர் பணத்தை, பரி­வர்த்­தனை செயல்­பாட்­டிற்­கான சாத­ன­மாக பார்க்­கின்­றனர். பொரு­ளா­தார மேதை கீன்­சிற்கு பின், சிலர் பணத்தை ஒரு வகை நிதி சொத்­தாக பார்க்க துவங்­கி­யுள்­ளனர்.
இந்த அணு­கு­மு­றை­களில், பணம் பொரு­ளா­தா­ரத்தில் எப்­படி ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­கி­றது என்றோ, அதன் வடிவம் பற்­றியோ அதிகம் கவ­னிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால், சைபர் பணத்தின் வரு­கைக்கு பின், இந்த கேள்­விகள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 05,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)