காப்­பீடு பிரீ­மியம் செலுத்த அவ­காசம் நீட்­டிப்புகாப்­பீடு பிரீ­மியம் செலுத்த அவ­காசம் நீட்­டிப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.13 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.13 ...
2017ல் அதிக ஊதியம் தரக்­கூ­டிய வேலை­வாய்ப்­புகள் எவை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2016
01:26

மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், வர்த்­தக நிறு­வ­னங்­களின் தேவை­களும் மாறு­வதால், வேலை­வாய்ப்­பு­களை நாடு­ப­வர்­களும், அதற்­கேற்ற திறன்­களில் கவனம் செலுத்­து­வது அவ­சியம்.
சில ஆண்­டு­க­ளுக்கு முன் வரை, தகவல் தொழில்­நுட்பத் துறை, அதிக வேலை­வாய்ப்பு கொண்ட துறை­யாக கரு­தப்­பட்டது. இத்­துறை, அதிக ஊதியம் தரும் துறை­யா­கவும் அமைந்­தது. ஆனால், தற்­போது மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், தகவல் தொழில்­நுட்பத் துறை நிறு­வ­னங்­களே, வளர்ச்­சிக்­கான சவாலை எதிர் நோக்­கி­உள்­ளன. மேலும், தானி­யங்­கி­ம­ய­மாக்கல் மற்றும் செயற்கை நுண்­ண­றிவு போன்­ற­வற்றால், இத்­து­றையில் வேலை­வாய்ப்பு குறையும் என, அஞ்­சப்­ப­டு­கி­றது.
அண்­மையில், மனி­த­வளத் துறை வல்­லு­னரும், முத­லீட்­டா­ள­ரு­மான மோகன்தாஸ் பை, ‘தானி­யங்­கி­ம­யத்தால், 2025 ஆண்டு வாக்கில், 20 கோடி அள­வுக்கு வேலை­வாய்ப்பு இழப்பு ஏற்­ப­டலாம்’ என, கூறி­யி­ருந்தார். ஏற்­க­னவே, பல்­வேறு ஆய்வு அறிக்­கை­களும், வருங்­கா­லத்தில் ரோபோக்­களின் பயன்­பாடு அதி­க­ரிக்கும் வாய்ப்பு இருப்­பதால், வேலை­வாய்ப்­புகள் குறையும் என்றும் எச்­ச­ரித்­துள்­ளன.
அதிக ஊதியம்!
மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், பிர­கா­ச­மான வாய்ப்­பு­களை கொண்ட துறை­களும் பல இருக்­கின்­றன. சரி­யான தொழில் துறையை தேர்வு செய்து திறன் பெற்றால், அதிக ஊதியம் பெறும் வாய்ப்பு இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
இத­ன­டிப்­ப­டையில், 2017ல், அதிக ஊதியம் தரக்­கூ­டிய வேலை­வாய்ப்­பு­களை, பிஸ்னஸ் இன்­சைடர் இணை­ய­தளம் பட்­டி­ய­லிட்டு உள்­ளது. மார்க்­கெட்டிங் துறை பெரும் மாற்­றத்தை சந்­தித்து வரு­கி­றது. இதன் கார­ண­மாக, வளர்ச்­சிக்­கான புதிய பாதை காட்டும், குரோத் ஹேக்கர் எனும் பணி வாய்ப்பு முக்­கி­ய­மா­கி­றது.
பல்­வேறு மார்க்­கெட்டிங் சேனல்கள் மற்றும் பொருட்கள் வடி­வ­மைப்பு வழி­களில், வேக­மாக பரி­சோ­த­னை­களை முயற்­சித்து, நிறு­வ­னத்தின் வர்த்­தக வளர்ச்­சிக்கு உத­வக்­கூ­டிய, செயல்­திறன் வாய்ந்த வழி­களை கண்­ட­றியும் பணி­யாக இது அமை­கி­றது. இளங்­கலை பட்டம், இதற்­கான தகு­தி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்த பணியில் மாதம், 60 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற வாய்ப்­புள்­ளது.
இதே போல, டெக்­னிக்கல் ரைட்டர் எனப்­படும், தொழில்­நுட்ப எழுத்­தா­ளர்கள் பணி­க­ளுக்­கான தேவையும் அதி­க­ரித்து வரு­கி­றது. தொழில்­நுட்பம் சார்ந்த உள்­ள­டக்­கத்தை உரு­வாக்கக் கூடி­ய­தாக, இந்த பணி அமை­கி­றது. தொழில்­நுட்­பத்தை மைய­மாக கொண்டு இயங்கும் நிறு­வ­னங்­களில், இதற்­கான வேலை­வாய்ப்பு உள்­ளது; பட்­டப்­ப­டிப்பு போது­மா­னது. ஆங்­கி­லத்தில் எழுத்­தாற்றல் மற்றும் தொழில்­நுட்ப புரிதல் அவ­சியம். மாதம், 50 ஆயிரம் ரூபாய் முதல், 1.7 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்­புள்­ளது.
சமூக ஊடக மேலாளர்
இன்­றைய தகவல் தொழில்­நுட்ப யுகத்தில், பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் மற்றும் வங்­கிகள் தங்கள் விளம்­பர உத்­திக்­காவும், வாடிக்­கை­யா­ளர்­களை தொடர்பு கொள்­ளவும், சமூக ஊட­கங்­களை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றன. எனவே, நிறு­வ­னங் ­களில், சமூக ஊடக மேலாளர் எனும் பத­விக்கு முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்­துள்­ளது.
இத்­து­றையில், 10 ஆண்­டுகள் அனு­பவம் உள்­ள­வர்கள், இந்த பத­விக்கு பரி­சீ­லிக்­கப்­படு­கின்­றனர். நிறு­வன பிராண்டின் மதிப்பை சமூக ஊட­கங்­களில் நிர்­வ­கிப்­பது, இந்த பணியில் உள்­ள­வர்­களின் பொறுப்­பாக அமை­கி­றது; பட்­டப்­ப­டிப்பே போது­மா­னது. சமூக ஊடகத் துறையில் அனு­பவம் தேவை. மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை சம்­பா­திக்க வாய்ப்­புள்­ளது. இதே போல, உற­வுகள் தொடர்­பான பிரச்­னைகள் தீர ஆலோ­சனை அளிக்கும். ரிலே­ஷன்ஷிப் தெரபிஸ்ட் எனும் பணியும் புதிய வேலை­வாய்ப்­பாக உரு­வாகி வரு­கி­றது.
நவீன வாழ்க்கை நெருக்­கடி கார­ண­மாக, மன அழுத்தம் அதி­க­ரித்து, இளம் தம்­ப­தியர் வாழ்க்­கையில், பிரச்­னைகள் அதி­க­ரித்து வரும் நிலையில், உற­வுகள் தொடர்­பான ஆலோ­ச­னைக்­கான தேவையும் அதி­க­ரித்­துஉள்­ள­தாக, உள­வியல் வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். மாதம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்­புள்­ளது. தேடி­யந்­தி­ரங்­களில் முன்­னிலை பெறு­வது தொடர்­பான உத்­தி­களை வகுத்து கொடுக்கும், எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் வேலையும் பிர­கா­ச­மா­ன­தாக அமை­கி­றது.
மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை சம்­பா­திக்க வாய்ப்­புள்­ளது. இந்­தி­யாவில், ‘ஸ்டார்ட் அப்’ எனும், புது­யுக நிறு­வ­னங்கள் அதி­க­ரித்து வரும் நிலையில், இத்­து­றைக்­கான தேவையும் அதி­க­ரித்து வரு­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
சேமிப்பின் முழு பலனை பெற!
நம்மில் பலரும் சேமிப்பின் அரு­மையை உணர்ந்­தி­ருக்­கிறோம். அதன் படி சேமிக்­கவும் செய்­கிறோம். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது. சேமிப்பின் முழு பலனை பெற வேண்டும் என்றால், சேமித்த பணத்தை என்ன செய்­கிறோம் என்­பதும் முக்­கியம். உதா­ர­ணத்­திற்கு பலரும் பணத்தை சேமிக்க சிக்­க­னத்தை கடை­பி­டிக்­கலாம்: வீண் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­தலாம். ஆனால் இவ்­வாறு மிச்சம் செய்யும் பணத்தை என்ன செய்­கிறோம் என்­பதை கவ­னிக்க வேண்டும்.
சேமிக்­கப்­பட்ட தொகை, வேறு ஒன்­றுக்­காக செலவு செய்­யப்­படும் நிலை இருந்தால், அதனால் பயன் இல்லை. எனவே, செலவை மிச்சம் செய்து, சேமிக்கும் பணத்தை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை உரிய முறையில் முத­லீடு செய்ய வேண்டும். குறைந்த பட்சம் சேமிப்பு கணக்­கி­லா­வது போட்டு வைக்க வேண்டும். பின்னர் பொருத்­த­மான முத­லீட்டு சாத­னத்­திற்கு மாற்­றி­விட வேண்டும். அப்­போது தான் சேமிப்பு வளரும்.
நெருக்­கடி கற்­றுத்­தரும் நிதி பாடங்கள்
ரூபாய் நோட்டு செல்­லாது, என்ற அறி­விப்பு நட­வ­டிக்­கையால் ஏற்­பட்­டுள்ள சிக்­கல்கள் தற்­கா­லி­க­மா­னது என்­றாலும், இந்த நெருக்­க­டியை சமா­ளிக்கும் அனு­பவம், சில முக்­கிய பாடங்­களை கற்­றுத்­தந்­துள்­ளது. இந்த பாடங்கள், நிதி வாழ்க்­கையில் எப்­போதும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யவை என்றும், நிதி திட்­ட­மி­டலில் பின்­பற்­றப்­பட வேண்­டி­யவை என்றும், நிதி வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்:
பட்ஜெட் முக்­கியம்
ரூபாய் நோட்டு நெருக்­கடி, பட்ஜெட் போட்டு செலவு செய்­வதன் அவ­சி­யத்தை புரிய வைத்­தி­ருக்கும். நிதி திட்­ட­மி­டலில் முதலில் சொல்­லப்­ப­டு­வதும் இது தான். பணப்­பு­ழக்கம் குறைந்­துள்­ளதால், மிகவும் அத்­தி­யா­வ­சிய செல­வு­க­ளுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற செல­வு­களை பின் பார்த்துக் கொள்­ளலாம் என தள்ளி வைத்து, தேவை­யில்­லாத செல­வு­களை முற்­றிலும் தவிர்த்­தி­ருப்போம். நிலைமை சரி­யா­னதும், இதை தளர்த்திக் கொள்­ளலாம் என்­றாலும், முதலில், சேமிப்­புக்கு பணம் ஒதுக்கி விட்டு, செல­வு­க­ளையும் திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும்.
பீதி வேண்டாம்
நிதி நெருக்­கடி ஏற்­படும் போது பயமும், பதற்­றமும் உண்­டா­வது இயல்பு தான். ஆனால், அதற்­காக முத­லீட்டு உத்­தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்­றில்லை. ரூபாய் நோட்டு செல்­லாது அறி­விப்­புக்கு பின், பலரும் தங்­கத்தில் முத­லீடு செய்ய முற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. தங்கம் பாது­காப்­பான முத­லீடு தான். ஆனால், முத­லீடு முடிவு என்­பது ஒரு­வரின் வயது, நிதி நிலை, நிதி இலக்­குகள் அடிப்­ப­டையில் தான் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். திடீர் நிகழ்­வு­களால் ஏற்­படும் உணர்­வுகள், நிதி முடி­வு­களை தீர்­மா­னிக்க கூடாது.
சேமிப்­புக்கு பின்!
சேமிப்பு முக்­கியம் என்­பதில் மாற்று கருத்து கிடை­யாது. ஆனால், சேமிக்கும் பணத்தை வீட்­டி­லேயே வைத்­துக்­கொள்­வதை விட சரி­யான முறையில் முத­லீடு செய்ய வேண்டும். அவ­சரத் தேவைக்­காக ரொக்கம் வைத்­தி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால், இந்த பணத்தை கூட குறு­கிய கால முத­லீடு திட்­டங்­களில் போட்டு வைக்­கலாம். லிக்விட் பண்ட், சேமிப்பு கணக்­குடன் இணைந்த வைப்பு நிதி என, பல வழிகள் உள்­ளன. வீட்­டி­லேயே பணத்தை வைத்­தி­ருக்கும் போது, அது மேலும் வளர்ந்து, பலன் தர வாய்ப்­பில்­லாமல் போகும்.
மாற்றம் அவ­சியம்
தொழில்­நுட்ப மாற்­றத்­திற்கு ஏற்ப, நாமும் மாறு­வது அவ­சியம். அரசும், வங்­கி­களும் டிஜிட்டல் வசதி பற்றி, அடிக்­கடி கூறி வந்­தாலும், பலரும் அதை பொருட்­ப­டுத்­தாமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால், இப்­போது நெருக்­கடி சூழலில் தான், பில் செலுத்­தவும், பண வர்த்­தனை செய்­யவும் டிஜிட்டல் வழி­மு­றைகள் எந்த அளவு பய­னுள்­ளவை என புரிந்­துள்­ளது. எனவே, எப்­போ­துமே தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்து கொள்­வது அவ­சியம். டிஜிட்டல் பரி­வர்த்­தனை வச­திகள் நேரத்­தையும் மிச்­ச­மாக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 05,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)