சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி குறையும்சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி குறையும் ... புதிய வாய்ஸ் கால் திட்டம் : ஐடியா நிறுவனமும் அறிவித்தது புதிய வாய்ஸ் கால் திட்டம் : ஐடியா நிறுவனமும் அறிவித்தது ...
அனைத்து தொழில் துறை­யினர் பாராட்டு:மத்­திய அரசின் ஊக்க சலு­கை­களால்ரொக்கம் சாரா பரி­வர்த்­தனை சூடு­பி­டிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2016
05:03

புது­டில்லி:நாட்டில், ரொக்கம் சாராத, ‘டிஜிட்டல்’ வழி­யி­லான பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு அறி­வித்த சலு­கை­க­ளுக்கு, தொழில் துறை­யினர் பாராட்டு தெரி­வித்து உள்­ளனர். மத்­திய அரசின் அறி­விப்­பின்­படி, டெபிட், கிரெடிட் கார்­டு­களை பயன்­ப­டுத்தி, பெட்ரோல், டீசல் வாங்­கினால், லிட்­டருக்கு, 0.75 சத­வீத தொகை, தள்ளுபடி கிடைக்கும். புற­நகர் ரயில்­க­ளுக்­கான சீசன் டிக்கெட் கட்ட­ணத்தில், 2017 ஜன., 1 முதல், 0.5 சத­வீதம் தள்­ளு­படி பெறலாம்.
ஆன்லைன் முலம் முன்­ப­திவு செய்யும் ரயில் பய­ணி­க­ளுக்கு, 10 லட்சம் ரூபாய், விபத்து காப்பீடு இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என, அறி­விக்­கப்­பட்டு உள்ளது. 2,000 ரூபாய் வரை­யி­லான, டிஜிட்டல் பரி­வர்த்­த­னைக்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.மின்­னணு முறையில், பொது மற்றும் ஆயுள் காப்­பீட்டு பிரீ­மியம் செலுத்­தினால், முறையே, 10 மற்றும் 8 சத­வீதம் தள்­ளு­படி என்­பது உள்­ளிட்ட சலு­கை­களும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன. இத்­துடன், வியா­பா­ரி­க­ளுக்­கான, ‘பாய்ன்ட் ஆப் சேல்’ எனப்­படும், கைய­டக்க மின்­னணு சாத­னத்­திற்கு, வங்­கிகள் வசூ­லிக்கும் மாத வாடகை, 400 ரூபாயில் இருந்து, 100 ரூபா­யாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.
இந்த, பி.ஓ.எஸ்., பரி­வர்த்­த­னைக்­காக, வியா­பா­ரிகள், வங்­கி­க­ளுக்கு செலுத்தும் கட்­ட­ணமும் ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. இத்­துடன், 4.32 கோடி விவசா­யி­க­ளுக்கு, ‘ரூபே’ கிசான் கார்டு வழங்­கவும், கிரா­மங்­களில், டிஜிட்டல் பணப் பரிவர்த்­த­னையை ஊக்­கு­விக்­கவும், பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்கப்­பட்டு உள்­ளன.
இந்­திய இணையம் மற்றும் மொபைல் போன் கூட்­ட­மைப்பின் தலைவர் சுபோ ராய்:டிஜிட்டல் சாத­னங்­களை பயன்­ப­டுத்தும் வாடிக்­கை­யாளர், நேர­டி­யாக பயன்­பெறும் வகையில், முதன்­மு­றை­யாக அளிக்­கப்­பட்­டுள்ள சலு­கைகள் வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்­களின் ரொக்கப் பரி­வர்த்­தனை குறையும். அவர்கள், ரொக்கம் சாரா டிஜிட்டல் பரி­வர்த்­த­னைக்கு மாறுவர்.எம்.எஸ்.மணி, மூத்த இயக்­குனர், டெலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் எல்.எல்.எபி.: இந்­திய பொரு­ளா­தாரம், பணப் பரி­வர்த்­த­னையில் இருந்து, டிஜிட்டல் பரி­வர்த்தனைக்கு மாற, அரசின் சலுகை திட்­டங்கள் உதவும். மக்கள், கிரெடிட், டெபிட் கார்­டுகள், மொபைல் போன் வாயி­லாக, பணம் செலுத்து­வது பர­வ­லாகும்.
பிரமோத் சக்­சேனா, தலைவர், ஆக்­சிஜன் சர்­வீசஸ்:மக்­க­ளிடம் ரொக்கம் தேங்­கு­வது குறையும்; சேமிப்பு பெருகும்; வட்டி வருவாய் கிடைக்கும். நவீன் சூர்யா, தலைவர், இந்­திய பணப் பரி­வர்த்­தனை அமைப்பு:மின்­சாரம், மொபைல் போன், தொலை­துார ரயில் பயணம் ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணங்­க­ளுக்கும், தள்­ளு­படி சலு­கை­களை அறி­விக்க வேண்டும். மத்­திய அரசின் சலு­கைகள், மக்­க­ளுக்கு மட்­டு­மின்றி, நிதித் துறையில் உள்ள தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் வளர்ச்­சிக்கும் துணை புரியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)