பதிவு செய்த நாள்
11 டிச2016
03:24

புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி,1.9 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது. இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த அக்டோபரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.9 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது. பொறியியல் சாதனங்கள் துறையின் உற்பத்தி குறைவு, தயாரிப்பு துறையின் மோசமான செயல்பாடு போன்றவற்றால் வளர்ச்சி குறைந்துள்ளது.
தொழில் துறை உற்பத்தி, ஜூலை மற்றும் ஆகஸ்டில் முறையே, மைனஸ் 2.5 சதவீதம் மற்றும் மைனஸ் 0.7 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டிருந்தது. எனினும் செப்டம்பரில், தொழில் துறை உற்பத்தி, 0.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 9.9 சதவீதமாக இருந்தது. நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 0.3 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4.8 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|