பதிவு செய்த நாள்
11 டிச2016
03:26

சென்னை:"சென்னையில் நடக்க உள்ள சர்வதேச ரப்பர் கண்காட்சியில், வெளிநாடுளை உள்ளடக்கிய, 400 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்திய ரப்பர் தொழில் கூட்டமைப்பு சார்பில், சர்வதேச ரப்பர் கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில், ஜன., 19 முதல், 21 வரை நடக்கிறது. இதில், சீனா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. ரப்பர் தொழிலில் நிலவும் சவால், சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கண்காட்சியில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வினோத் சைமன் கூறியதாவது:சென்னையில், வரும், 2017 ஜன., மாதம், சர்வதேச ரப்பர் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இதில், ரப்பர் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறும். வெளிநாடுகளை உள்ளடக்கிய, 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், இந்த நல்ல வாய்ப்பை, ரப்பர் துறையை சார்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|