பதிவு செய்த நாள்
11 டிச2016
03:28

புதுடில்லி:கடந்த அக்., நிலவரப்படி, செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்து, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணைஅமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், லோக்சபாவில் கூறியதாவது:இரண்டு நிதி ஆண்டுகளாக வர்த்தகம் புரியாமல், வரவு – செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யாமல் உள்ள நிறுவனங்கள், செயல்படாத நிறுவனங்கள் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.
கடந்த, 2014 – 15 மற்றும் 2015 – 16ம் நிதியாண்டுகளில், செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை, முறையே, 1,39,373 மற்றும் 1,38,691 ஆக இருந்தது. கடந்த அக்., நிலவரப்படி, செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை, 1,38,410 ஆக குறைந்துள்ளது. ஆக, கடந்த மூன்று ஆண்டுகளில், செயல்படாத நிறுவனங்கள் பிரிவில் இருந்து, 4,000 நிறுவனங்கள் வெளியேறி உள்ளன.மஹாராஷ்டிராவில் தான், செயல்படாத நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அங்கு, 33,598 நிறுவனங்கள், இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. அடுத்த இடங்களில், டில்லி, 28,066; தெலுங்கானா, 17,133; தமிழகம், 15,352, குஜராத், 10,793 ஆகியவை உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|