2017ல் ஊதிய உயர்வு  எப்­படி இருக்கும்?2017ல் ஊதிய உயர்வு எப்­படி இருக்கும்? ... டாடா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி  நீக்கம் டாடா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன்­க­ளுக்­கானவட்டி விகிதம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
05:47

ரெப்போ வகிதம் மாற்றம் இல்­லாமல் தொடரும் நிலை­யிலும், கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறை­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
பர­வ­லாக எதிர்­பார்க்­கப்பட்­ட­தற்கு மாறாக, ரிசர்வ் வங்­கியின் நிதிக் கொள்கை குழு, அண்­மையில் வெளி­யிட்ட நிதிக் கொள்கை அறி­விப்பில், ரெப்போ விகி­தத்தை குறைக்­க­வில்லை. ஏற்­க­னவே உள்ள ரெப்போ விகி­தமே தொடரும் என, தெரி­விக்­கப்­பட்­டது.
ரிசர்வ் வங்­கியின் இந்த அறி­விப்பு, பொரு­ளா­தார வல்­லு­னர்கள் மற்றும் வங்­கி­யா­ளர்­களை ஏமாற்­றத்­திலும், ஆச்­ச­ரி­யத்­திலும் ஆழ்த்­தி­யது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகி­தத்தை, 25 அடிப்­படை புள்­ளி­க­ளா­வது குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, பல்­வேறு துறை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், வட்டி குறைப்பு ஓர­ளவு ஊக்­க­மாக அமைந்­தி­ருக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. வங்­கிகள், மத்­திய வங்­கி­யிடம் இருந்து பெறும், குறு­கிய கால கடன்­க­ளுக்­கான ரெப்போ விகிதம் குறைக்­கப்­பட்டால், வங்­கி­களும், தங்கள் வட்டி விகி­தத்தை குறைக்கும் வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
எனவே, ரிசர்வ் வங்கி, ரெப்போ வகி­தத்தை குறைத்­தி­ருந்தால், கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தமும் குறைக்­கப்­பட்­டி­ருக்கும். இந்­நி­லையில், ரிசர்வ் வங்­கியின் முடிவு, வீட்­டுக்­கடன் வாடிக்­கை­யா­ளர்க­ளையும், ஏமாற்­றத்தில் ஆழ்த்­தி­ உள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
காரணம் என்ன?
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதம் மாற்றம் இல்­லாமல் தொடரும் என, அறி­வித்­த­தற்கு, சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு பொரு­ளா­தார சூழல் கார­ண­மாக இருக்­கலாம் என, கரு­தப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க வளர்ச்சி விகிதம், உள்­நாட்டு பண­வீக்க போக்கு உள்­ளிட்ட அம்­சங்கள் தாக்கம் செலுத்­தி­ய­தாக, பொரு­ளா­தார வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர். ரிசர்வ் வங்கி காத்­தி­ருந்து பார்த்து முடிவு செய்யும் அணு­கு­ மு­றையை கடை­பி­டித்­தி­ருக்­கலாம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.
இத­ன­டிப்­ப­டையில், அடுத்த நிதிக் கொள்கை அறி­விப்பில், வட்டி குறைப்பு இருக்­கலாம் என்றும் தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன. இத­னி­டையே, ரெப்போ விகிதம் குறைக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும் கூட, கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை, வங்­கிகள் குறைக்கும் வாய்ப்பு இருப்­ப­தாக, வல்­லு­னர்கள் கருத்து தெரி­வித்து உள்­ளனர்.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை அடுத்து, பழைய ரூபாய் நோட்­டுகள், வங்­கி­க­ளிடம் டிபாசிட் செய்­யப்­பட்­டுள்­ளதால், வங்­கி­களில், டிபா­சிட்கள் பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக, வங்­கிகள் டிபாசிட் திரட்டும் செலவு குறைந்­துள்­ளது. பல வங்­கிகள், டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைத்­துள்­ளன.
வட்டி குறையும்?
இதே போலவே, கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தமும் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வங்­கி­க­ளிடம் அதி­க­ளவில், டிபாசிட் பணம் குவிந்­துள்­ளது. மேலும், வங்­கி­க­ளுக்­கான, சி.ஆர்.ஆர்., எனப்­படும், தற்­கா­லிக ரொக்க இருப்பு விகிதம், 100 சத­வீ­த­மாக இருக்க வேண்டும் என, அறி­வித்­த­தையும், ரிசர்வ் வங்கி விலக்கி கொண்­டு உள்­ளது. இவ்­வாறு இருப்பு வைக்­கப்­படும் தொகைக்கு வட்டி கிடை­யாது என்­பதால், வங்­கிகள் இந்த அறி­விப்பால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும். ஆனால், இது விலக்கி கொள்­ளப்­பட்­டி­ருப்­பதால், வங்­கிகள் கடன் வழங்­கு­வ­தற்­கான தொகை அதி­க­ரித்­துள்­ளது. எனவே, கடன்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே, ஒரு சில வங்­கிகள், ரிசர்வ் வங்கி அறி­விப்­புக்கு முன்­பா­கவே கடன்­க­ளுக்­கான, எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யி­லான வட்டி விகி­தத்தை ஓர­ளவு குறைத்­துள்­ளன. வரும் மாதங்­களில், இந்த போக்கு தொட­ரலாம் என, கரு­தப்­ப­டு­கி­றது.
ரிசர்வ் வங்கி, கடந்த கடந்த காலங்­களில் அறி­வித்த வட்டி குறைப்பின் பலனை, வங்­கிகள் முழு­வ­து­மாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­க­வில்லை என்ற கருத்தும் இருக்­கி­றது. எனவே, தற்­போது பண இருப்பு அதி­க­ரித்­துள்ள நிலையில், வங்­கிகள் வட்டி விகி­தத்தை சிறி­த­ள­வேனும் குறைக்க வாய்ப்பு உள்­ள­தாக, வல்­லு­னர்கள் வாதி­டு­கின்­றனர்.
புதி­தாக வீட்­டுக்­கடன் பெற திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள், இந்த சூழலில் மாறும் வட்டி விகித அடிப்­ப­டையில், கடன் பெற தீர்­மா­னிக்­கலாம் என்றும் கூறு­கின்­றனர். ஏற்­க­னவே உள்ள வாடிக்­கை­யா­ளர்­களை பொறுத்­த­வரை, வங்­கிகள், எம்.சி.எல்.ஆர்., விகி­தத்தை மாற்றி அமைக்கும் வரை காத்­தி­ருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்­கப்­படும் வீட்­டுக்­க­டன்­க­ளுக்கு, இந்த முறை­யி­லேயே வட்டி விகிதம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. முந்­தைய பேஸ்ரேட் முறையில் கடன் பெற்­ற­வர்கள், விரும்­பினால், இந்த முறைக்கு மாறிக்­கொள்ளும் வாய்ப்பும் அளிக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)