விடு­மு­றையை பயன்­ப­டுத்தி கொள்­ளாத ஊழி­யர்கள் விடு­மு­றையை பயன்­ப­டுத்தி கொள்­ளாத ஊழி­யர்கள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.45 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.45 ...
‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் ஆய்வு விப­ரங்­களை மத்­திய அர­சுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2016
03:29

புது­டில்லி:‘‘ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், தங்கள் துறை சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, அனைத்து தக­வல்கள் மற்றும் ஆய்வு விப­ரங்­களை, மத்­திய அர­சுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்,’’ என, மத்­திய மின்­னணு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­சக செயலர், அருணா சுந்­தர்­ராஜன் வலி­யு­றுத்தி உள்ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது:அரசின் ஒழுங்­கு­முறை கட்­டுப்­பாட்டு நெறி­க­ளுக்கும், அவற்றை நிறு­வ­னங்கள் பின்­பற்­று­வ­தற்கும் இடையே, அதிக இடை­வெளி இருக்கும்; இந்த யதார்த்த நிலைக்கு, ஸ்டார்ட் அப் துறையும் விதி­வி­லக்­கல்ல. ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டு­க­ளையோ அல்லது வரி­வி­திப்பு முறை­க­ளையோ, சம்­பந்­தப்­பட்ட துறை­யி­னரின் ஆலோ­ச­னை­யின்றி, மேம்­ப­டுத்த முடி­யாது.
இது, ஸ்டார்ட் அப் துறைக்கும் பொருந்தும். ஆகவே, இத்­துறை மேம்­பாடு காண வேண்­டு­மென்றால், அர­சுடன் நெருக்­க­மாக இணைந்து செயல்­பட முன்­வர வேண்டும்; துறை சார்ந்த செயல்­பா­டுகள் குறித்த விப­ரங்­க­ளையும், ஆய்­வு­க­ளையும், அரசு அதி­கா­ரி­க­ளுடன் பகிர்ந்து கொண்டு, பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்டும். மத்­திய அரசு ஏற்­பாடு செய்த பல கலந்­தாய்வுக் கூட்­டங்­களில், ஸ்டார்ட் அப் துறை சார்ந்த, மூத்த பிர­தி­நி­தி­களில் ஒருவர் கூட கலந்து கொள்­ளாமல் தவிர்த்­ததை, நான்கண்­டி­ருக்­கிறேன்; அப்­ப­டியே கலந்து கொண்­டாலும், அறிக்கை சமர்ப்­பிப்­பதில் ஆர்வம் காட்­டு­வ­தில்லை.
இத்­த­கைய சூழல் நிலவும் போது, ஸ்டார்ட் அப் துறை­யி­னரின் பிரச்­னை­களை, அரசு எப்­படி அறிந்து கொள்ளும்? ஆகவே, ஸ்டார்ட் அப் துறை­யினர், தங்கள் முன்­னேற்­றத்­திற்கு தடை­யாக உள்ள அம்­சங்­களை, அரசு அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவற்­றுக்கு விரைந்து தீர்வு காண வச­தி­யாக, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், அனைத்து தக­வல்­களையும், ஆய்வு விப­ரங்­க­ளையும் வெளிப்­படை­யாக, அர­சுக்கு தெரி­விக்க வேண்டும். இந்­தியா, மிகப்­பெ­ரிய சந்தை வாய்ப்புடன், விரை­வாக புதிய தொழில்­நுட்­பத்தை தழுவும் நாடாக விளங்­கு­கி­றது.
இது, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, குறிப்­பி­டத்­தக்க வர்த்­தக வாய்ப்­பு­களை வழங்கும். ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், ஒரே பிரிவில் கவனம் செலுத்­து­வதை தவிர்த்து, அதிகம்கவ­னிக்­கப்­ப­டாமல் உள்ள துறை­களில் நுழைய வேண்டும். குறிப்­பாக, இந்தியாவில், வேளாண் துறையில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, வள­மான வர்த்­தக வாய்ப்­புகள் உள்­ளன. அதை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இவ்­வாறு அவர் கூறினார்.
வலை­தளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­ப­டு­பவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் என, அழைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றின் எண்­ணிக்­கையில், அமெ­ரிக்கா முத­லி­டத்­திலும், அடுத்து, பிரிட்டன், இந்­தியா ஆகி­ய­வையும் உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)