டாடா டிரஸ்ட் தலைவர் பத­வி­யி­லி­ருந்து ரத்தன் டாடா வில­கலா?டாடா டிரஸ்ட் தலைவர் பத­வி­யி­லி­ருந்து ரத்தன் டாடா வில­கலா? ... இந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு இந்­தி­யாவில் முத­லீடு செய்ய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு ...
‘வெள்ளம், புயல் வந்­தாலும் தமி­ழ­கத்தில் உற்­பத்தி தொடரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2016
01:26

‘‘வெள்ளம், புயல் வந்­தாலும், தமி­ழ­கத்தில், கார் உற்­பத்தி தொடரும்,’’ என, பி.எம்.டபிள்யூ., இந்­தியா நிறு­வன தலைவர், பிராங்க் – இ ஷ்லோடர் தெரி­வித்தார்.
ஜெர்­ம­னியைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யூ., கார் நிறு­வனம், ‘ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ, மினி’ என, மூன்று வகை கார்கள், பி.எம்.டபிள்யூ., பைக்­கு­களை தயா­ரித்து வரு­கி­றது. அதில், ‘மினி’ என்­பது, சிறிய ரக கார்.
இந்­தி­யாவில், தற்­போது, ‘திரி டோர், பைவ் டோர், கன்­வர்­டிபிள், கன்ட்­ரிமேன்’ ஆகிய நான்கு வகை, ‘மினி’ கார்கள் கிடைக்­கின்­றன. அடுத்த வர­வான, மினி – கிளப்மேன் காரை, பிராங்க் – இ ஷ்லோடர், மும்­பையில், நேற்று முன்­தினம் அறி­முகம் செய்தார்.
பின், நமது நிரு­ப­ரிடம் அவர் கூறி­ய­தா­வது:இந்த கார், ஜெர்மன் தொழில்­நுட்­பமும், பிரிட்டிஷ் வடி­வ­மைப்பும் சேர்ந்த அற்­புத கலவை. மினி வகை­களில், இது பெரி­யது. நீண்ட துார பய­ணத்­திற்கு, குடும்­பத்­துடன் செல்ல வச­தி­யா­னது.பின்­பு­றத்தில், ரிமோட் மூலம் திறக்கும், இரு கத­வுகள் இருப்­பது புதுமை. பின்­புற சீட்டை மடக்­கலாம் என்­பதால், பொருட்கள் வைக்கும் இடத்தை, மூன்று மடங்கு அதி­க­ரித்து கொள்­ளலாம்; இருக்­கை­களை, ரிமோட் மூலம் சரி­செய்­யலாம்.
ஸ்டார்ட் செய்த, 7.2 வினா­டி­களில், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தை எட்­டலாம். அதி­க­பட்ச வேகம், 228 கி.மீ., என, முக்­கிய அம்­சங்­களின் பட்­டியல் நீளும். தமி­ழ­கத்தில், காஞ்சி மாவட்­டத்தில், 2007ல் துவங்­கிய, பி.எம்.டபிள்யூ., கார் உற்­பத்தி ஆலையில், சில மாதங்­க­ளுக்கு முன், 50 ஆயி­ர­மா­வது கார் வெளி வந்­தது. 2015ல், வெள்ளம் ஏற்­பட்ட போது பணிகள் பாதித்­தன. தற்­போது, வர்தா புயல் தாக்­கி­யுள்­ளது. இது, இயற்­கையின் சீற்றம்; கணிக்க முடி­யா­தது.
அதனால், தமி­ழ­கத்தை விட்டு போகும் எண்­ண­மில்லை. இப்­போ­தைக்கு, இரண்­டா­வது ஆலை துவங்கும் எண்­ண­மில்லை. ஜெய­ல­லி­தா­விற்கு பின், பொறுப்­பேற்­றுள்ள, முதல்வர் பன்­னீர்­செல்வம், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தேவை­யான உத­வியை தொடர்ந்து செய்வார் என, நம்­பு­கிறோம். பி.எம்.டபிள்யூ., பைக், 2017ல், அறி­முகம் ஆகும். ஓசூரில் உள்ள, டி.வி.எஸ்., நிறு­வன ஆலையில் அது தயா­ராகும். இவ்­வாறு அவர் கூறினார். – நமது சிறப்பு நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)