பதிவு செய்த நாள்
18 டிச2016
02:43

புதுடில்லி:இந்தியாவின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின், ஏப்., – நவ., வரையிலான காலத்தில், 17 ஆயிரத்து, 492 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 24 ஆயிரத்து, 110 கோடி டாலராக உள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 6,617 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 8,857 கோடி டாலராக அதிகரித்து இருந்தது.
கடந்த நவம்பரில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 5.89 சதவீதம் உயர்ந்து, 680 கோடி டாலர் என்றளவில் உள்ளது. கச்சா எண்ணெய் இல்லாத பொருட்களின் இறக்குமதி, 11.7 சதவீதம் அதிகரித்து, 261 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2014 டிச., முதல், 2016 மே வரை, தொடர்ந்து, 18 மாதங்களுக்கு, இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்தது. பின், நடப்பாண்டு ஜூன் மாதம் மட்டும், ஏற்றுமதி அதிகரித்த நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சரிவடைந்து விட்டது. தற்போது, ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
இது குறித்து, ஏற்றுமதி கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்வதேச நிலவரங்களால், நாட்டின் ஏற்றுமதி குறைவாக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தியது; மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு ஆகியவற்றால், குறுகிய கால கட்டத்துக்கு ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இன்னும் சில மாதங்களில், இயல்பு நிலை திரும்பும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|