பதிவு செய்த நாள்
19 டிச2016
05:27

இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 19.71 ஏ.டி.எம்.,கள் இருப்பதாக சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது. ஐ.எம்.எப்., அமைப்பு நடத்திய நிதிச்சேவை அணுகும் தன்மை தொடர்பான ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் அமைந்துள்ளது.இதன்படி, 2011ம் ஆண்டு இந்தியாவில் ஏ.டி.எம்.,கள் எண்ணிகை ஒரு லட்சம் பேருக்கு 8.85 ஆகவும், 2014ல் ஒரு லட்சம் பேருக்கு 17.80 ஆகவும் இருந்துள்ளது. 2015ம் ஆண்டில் இது 19.71 ஆக உள்ளது. இந்த அறிக்கை படி சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட மக்காவு பகுதியில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பேருக்கு 254 ஏ.டி.எம்.,கள் அமைந்து உள்ளன. அடுத்தபடியாக கனடாவில் 220 ஏ.டி.எம்.,கள் உள்ளன. பிரிக் அமைப்பு நாடுகளில், பிரேசிலில் 114, ரஷ்யாவில் 173, சீனாவில் 76 மற்றும் தென்னாப்ரிக்காவில், 69 என இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது. புவியியல் பரப்புப்படி பார்த்தால், இந்தியாவில் 1,000 சதுர அடிக்கு 61.88 ஏ.டி.எம்.,கள் உள்ளன. இந்தியாவில் வங்கி கிளைகளை எளிதாக கண்டடைய முடிவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.ரிசர்வ் வங்கி தகவல் படி, 2016 ஜூனில் நாட்டில் 2,15,039 ஏ.டி.எம்.,கள் உள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 12 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|