பதிவு செய்த நாள்
19 டிச2016
05:28

இணையம் மூலமான பண பரிவர்த்தனை வசதிகளில் ‘நெப்ட்’ வசதி அதிகம் பயன்படுத்தப்படுவதாக இருக்கிறது. தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை வசதி என்பதன் சுருக்கமே, நெப்ட் எனப்படுகிறது. இந்த வசதி மூலம் வங்கி கணக்கில் இருந்து இணையம் மூலம் இன்னொருவர் வங்கி கணக்கிற்கு எளிதாக பணம் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஓர் அறிமுகம்;‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்ப நெட் பேங்கிங் வசதி இருக்க வேண்டும். மேலும் பணம் அனுப்பும் நபர் வங்கி கணக்கு, பெயர் ஐ.எப்.எஸ்.கோடு ஆகிய விபரங்கள் தெரிய வேண்டும். பணம் அனுப்ப முதலில், உங்கள் நெட் பேங்கிங் கணக்கிற்குள் நுழைய வேண்டும். அதன் பின், தேர்ட் பார்டி டிரான்ஸ்பர் வசதிக்கான பகுதியை கண்டறிந்து, ‘கிளிக்’ செய்ய வேண்டும். இப்போது அதே வங்கிக்குள் மாற்றுவது, வேறு வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்துவது ஆகிய வாய்ப்புகளை பார்க்கலாம். பின், ‘ரிக்வஸ்ட்’பகுதியில் உங்கள் கணக்கில் இருந்து பணம் பெறுபவர் விபரத்தை தெரிவிக்கும் வாய்ப்பு பகுதியை காணலாம்.
என்ன தேவை?இந்த பகுதியை தேர்வு செய்ததும், பணம் பெறுபவர் அதே வங்கியைச் சேர்ந்தவரா? அல்லது வேறு வங்கியை சேர்ந்தவரா? என, தேர்வு செய்ய வேண்டும். அதற்குரிய பகுதியை ‘கிளிக்’ செய்ததும் பெயர், வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.கோடு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பரிவர்த்தனையை உறுதி செய்ய, வங்கி ஒருமுறை பாஸ்வேர்டை அனுப்பி வைக்கும். நீங்கள் உறுதி செய்த பின், பணம் பெறுபவரின் வங்கி கணக்கு சேர்க்கப்படும்.வங்கி கணக்கு சேர்க்கப்பட்ட பின், வங்கி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைக்கும். ‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்ப, உங்கள் கணக்கிற்குள் நுழைந்து பணத்தை வங்கிக்குள் உள்ள ஒருவரின் கணக்கிற்கா அல்லது வேறு வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கா எனும் வாய்ப்பை தேர்வு செய்து, அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும். பரிவர்த்தனையை உறுதி செய்த பின், நீங்கள் அனுப்பிய நபருக்கு, பணம், அரை மணி நேரத்திற்குள், அவரது கணக்கிற்கு சென்றுவிடும்.
கட்டணம் உண்டா?பணம் அனுப்ப சிறிதளவு கட்டணம் உண்டு. இது அனுப்பி வைக்கப்படும் தொகைக்கு ஏற்ப அமையும். இந்த வசதி மூலம், பணம் அனுப்ப குறைந்த பட்ச தொகை அல்லது உச்சபட்ச தொகை என வரம்பு இல்லை. ஆனால், 24 மணி நேரமும் இந்த வசதியை பயன்படுத்த முடியாது. இதன் வேலை நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். பொதுவாக, வார நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இதன் வேலை நேரம் அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|