பதிவு செய்த நாள்
19 டிச2016
05:30

நீங்கள் படித்து முடித்துவிட்டு, வேலை தேடுபவராக இருந்தாலும் சரி, ஏற்கனவே நல்ல வேலையில் இருந்தாலும் சரி, அல்லது எந்த பாதையில் செல்வது என குழப்பத்துடன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் சரி, உங்கள் பணி வாழ்க்கை மேம்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. நல்ல சம்பளமும், சலுகைகளும் மட்டுமே, உங்கள் பணி வாழ்க்கை வெற்றியின் அடையாளம் அல்ல. உங்களால் எட்டக்கூடிய உயரத்தை பணி வாழ்க்கையில் அடைவது முக்கியம். அதாவது உங்கள் திறமை, ஆற்றலுக்கேற்ற வகையிலான முன்னேற்றத்தை நீங்கள் பெற வேண்டும். இதற்கான வழிகள்:
பணி இலக்கு என்ன?சேமிப்பு, முதலீடு பற்றி பேசப்படும் போதெல்லாம் நிதி இலக்கு குறித்து வலியுறுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதே போல பணி வாழ்க்கையிலும் உங்களுக்கான இலக்கு அவசியம். எந்த இடத்தை அடைய விரும்புகிறீர்கள் என, உங்களுக்குள் ஒரு தெளிவான வரையறை இருக்க வேண்டும். வேலைக்கு இலக்கான படிப்பை முடித்ததும் தீர்மானிப்பதே பொருத்தமாக இருக்கும் என்றாலும், வேலைக்கு சேர்ந்த பிறகும் கூட உங்கள் திறமை, ஆர்வம், பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் பணி இலக்கை இறுதி செய்யலாம்.
கற்றல் இனிதுமேற்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என, பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால் கற்றல் என்பது ஒரு தொடர் செயல்பாடு. இந்த இடத்தில் தான் பணி இலக்கு முக்கியத்துவம் பெறுகிறது. உங்கள் இலக்கை நோக்கி முன்னேற தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, அப்டேட் செய்து கொள்ளுங்கள். தேவை எனில் சான்றிதழ் படிப்பு அல்லது பயிற்சி திட்டத்தில் சேரலாம். இப்போது இணையம் மூலம் பாடத்திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொழில்முனைவோர் வழிஅலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று முன்னேறுவது தான், அனைவரின் விருப்பம். ஆனால் உயர் பதவிக்கு வந்ததுமே இது போதும் என, நினைத்துவிடக்கூடாது. இந்த கட்டத்தில் தொழில்முனைவோர் போல யோசிக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தில் உள்ள வாய்ப்புகள் மற்றும் தேவைகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும், அதற்கான திறன்கள் என்ன என யோசியுங்கள். ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்குச் சென்று கூட உங்கள் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் வளர்ச்சிக்கான எண்ணங்களை வரவேற்கின்றன.
வலைப்பின்னல்அனுபவமும், ஆற்றலும் மட்டும் அல்ல, தொடர்புகளும் உங்கள் பலம். எனவே துறை சார்ந்த தொடர்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான புதிய வாய்ப்புகள் தொடர்புகள் மூலம் கிடைக்கலாம். அவர்களுடனான அனுபவ பகிர்வு உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் இதற்கு உதவும். தொழில்முறையிலான சமூக வலைப்பின்னல் தளமான, லிங்க்டுஇன் தளத்தையும் இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சமூக வலைப்பின்னல் தளங்களில் வெளிப்படுத்திக்கொள்ளும் விதத்திலும் கவனமாக இருக்கவும்.
வழிகாட்டி தேவை!பணி வாழ்க்கையில் உங்களுக்கென வழிகாட்டி இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்லாசிரியர் போல, வழிகாட்டும் நபர் மூலம் தெளிவையும், ஊக்கத்தையும் பெறலாம். அதேபோல், உங்களுக்கு தெளிவு தேவைப்படும் போது, தயங்காமல் உதவி கேளுங்கள். துறை சார்ந்த அனுபவசாலியை நாடலாம் அல்லது தொழில்முறை ஆலோசகர் உதவியை நாடலாம். தேவைப்படும் புதிய திறன்கள் அல்லது மேம்பாட்டிற்கான வழிகள் குறித்த ஆலோசனைகளை பெறுவது பணி வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெற வைக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|