விதி­மு­றை­களை தளர்த்த ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கோரிக்கைவிதி­மு­றை­களை தளர்த்த ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கோரிக்கை ... ரூபாயின் மதிப்பு சரிவு : மீண்டும் ரூ.68-ஐ எட்டியது ரூபாயின் மதிப்பு சரிவு : மீண்டும் ரூ.68-ஐ எட்டியது ...
புதிய துறை­முக ஆணை­யங்கள் மசோதா: நாட்டின் முக்­கிய 12 துறை­மு­கங்கள் சிறப்­பான வளர்ச்சி காண உதவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
00:07

மும்பை : ‘புதிய துறை­முக ஆணை­யங்கள் சட்­டத்­தி­ருத்த மசோதா, நாட்டின் முக்­கிய, 12 துறை­மு­கங்­களின் சிறப்­பான வளர்ச்­சிக்கு உதவும்’ என, ‘கோட்டக் இன்ஸ்­டி­டி­யூ­ஷனல் ஈக்­யுட்டீஸ்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: மத்­திய அரசு, முக்­கிய துறை­மு­கங்­க­ளுக்கு முழு சுயஅ­தி­காரம் அளித்து, ஒளி­வு­ம­றை­வற்ற செயல்­பா­டு­க­ளுடன், நேர்த்­தி­யான நிர்­வாக நடை­மு­றையை கொண்டு வர முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, 1963ம் ஆண்டின், முக்­கிய துறை­முக பொறுப்பு கழக சட்­டத்தில் திருத்­தங்கள் செய்து, புதிய வரைவு மசோதா உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.
ஒப்புதல்இதற்கு, கடந்த வாரம், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் அளித்­துள்­ளது. இந்த வரைவு மசோதா, சட்ட வடிவம் பெற்று நடை­மு­றைக்கு வரும் போது, நாட்டின் முக்­கிய, 12 துறை­மு­கங்கள் மிகச் சிறப்­பான வளர்ச்சி காணும். ஏற்­க­னவே, 2015 –16ம் நிதி­யாண்டில், பெரும்­பான்­மை­யான முக்­கிய துறை­மு­கங்கள் நன்கு செயல்­பட்டு, சிறப்­பான வருவாய் ஈட்­டி­யுள்­ளன. இந்­நி­லையில், புதிய மசோ­தாவில் பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் நீக்­கப்­பட்டு உள்­ளதால், இனி, முக்­கிய துறை­மு­கங்கள் மேலும் சிறப்­பாக செயல்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இத்­து­றை­மு­கங்­களில், அரசு மற்றும் தனியார் கூட்­டுடன் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள பணிகள் சூடு பிடிக்கும்; அதி­க­ளவில், விரி­வாக்கத் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­படும். கடந்த பல ஆண்­டு­க­ளாக, தனியார் நிர்­வ­கித்து வரும் சிறிய துறை­மு­கங்கள், முக்­கிய துறை­மு­கங்­களை விட, சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­றன. இனி, இத்­த­கைய சிறிய துறை­மு­கங்­க­ளுக்கு, கடும் போட்­டி­யாக, முக்­கிய துறை­மு­கங்கள் விளங்கும்.
புதிய சட்டம், தற்­போது, முக்­கிய துறை­மு­கங்­களில், அரசு மற்றும் தனியார் கூட்­டுடன் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டங்­க­ளுக்கும், இனி மேற்­கொள்ள உள்ள புதிய திட்­டங்­க­ளுக்கும் பொருந்தும்.முக்­கிய துறை­மு­கங்­களில், அரசு, தனியார் கூட்டு நிறு­வ­னங்கள் மேற்­கொள்ளும் சேவை­க­ளுக்கு, அவை, சுய­மாக கட்­டணம் நிர்­ண­யித்துக் கொள்­வ­தற்­கான உரி­மையை, புதிய மசோதா வழங்­கு­கி­றது.
தனி வாரியம்அத்­துடன், முக்­கிய துறை­மு­கங்­களில், இதர முனை­யங்­களில், சேவை கட்­ட­ணத்தை நிர்­ண­யிக்க, தனி வாரியம் அமைக்­கவும், மசோதா வகை செய்­கி­றது. மேலும், முக்­கிய துறை­மு­கங்­களின் இயக்­குனர் குழுக்­க­ளுக்கு, முத­லீடு மற்றும் விரி­வாக்கத் திட்­டங்­க­ளுக்கு தேவை­யான நிதி குறித்து முடி­வெ­டுக்­கவும், நடை­முறை மூல­தன தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும், புதிய மசோதா, அதி­காரம் வழங்­கு­கி­றது. அத்­துடன், துறை­முக தேவை­க­ளுக்­காக, 40 ஆண்­டு­களும், இதர பயன்­பா­டு­க­ளுக்­காக, 20 ஆண்­டு­களும், நிலத்தை குத்­த­கைக்கு விடும் உரி­மையும் வழங்­கப்­ப­டு­கி­றது. இது போன்ற பல அம்­சங்கள் கார­ண­மாக, முக்­கிய துறை­மு­கங்­களின் வர்த்­தகம் பெருகும்; வருவாய் உயரும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)